முகப்பு /செய்தி /இந்தியா / கலர் பொடி வீசியதால் ஆத்திரம்... நண்பரை தீவைத்து எரித்த நபர் - ஹோலி பண்டிகையில் நேர்ந்த விபரீதம்!

கலர் பொடி வீசியதால் ஆத்திரம்... நண்பரை தீவைத்து எரித்த நபர் - ஹோலி பண்டிகையில் நேர்ந்த விபரீதம்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது கலர் பொடி வீசியபோது நடந்த தகராறில் ஒருவர் தனது நண்பரை தீவைத்து கொளித்த அதிர்ச்சி சம்பவம் தெலங்கானாவில் அரங்கேறியுள்ளது.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Telangana, India

வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக, வட மாநிலங்களில் இந்த பண்டிகை படு உற்சாாகமாக கொண்டாடப்படுகிறது. ஒருவர் பிறர் மீது வண்ணப்பொடிகளை தூவி வீசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் நேற்று ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது கலர் பொடி வீசியபோது நடந்த தகராறில் ஒருவர் தனது நண்பரை தீவைத்து கொளித்திய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அம்மாநிலத்தின் மேதக் மாவட்டத்தில் உள்ள மாரப்பள்ளி என்ற பகுதியில் வசிக்கும் தொழிலாளர் அம்பாதாஸ். இவரது நண்பர் முகமது அப்துல் ஷபீர்.

நேற்று ஹோலி கொண்டாட்டத்தின்போது ஜாலியாக அம்பாதாஸ் நண்பர் முகமது ஷபீர் மீது கலர் பொடிகளை பூச வந்துள்ளார். தனக்கு அது பிடிக்காது. என் மீது பொடி பூசினால் உன்னை பெட்ரோல் உற்றி தீ வைத்துவிடுவேன் என்று எச்சரித்துள்ளார். ஆனால், அதையும் மீறி ஷபீர் மீது அம்பதாஸ் கலர் பொடியை அப்பியுள்ளார். இதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த ஷபீர் தனது பைக் இருந்து பெட்ரோலை எடுத்து அதை அம்பாதஸ் மீது ஊற்றி சொன்னபடியே தீவைத்து எரித்துள்ளார்.

இதைப் பார்த்து பதறிப்போன அக்கம் பக்கத்தினர், தீயில் எரிந்து கொண்டிருந்த அம்பாதாஸை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை ஒஸ்மானியா பொது மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அம்பதாஸ் உடலில் 40 சதவீத தீக்காயம் ஏற்பட்டதாகவும், அதேவேளை உயிருக்கு ஆபத்தான கட்டத்தை அவர் தாண்டிவிட்டார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், முகமது ஷபீர் மீது இபிகோ 307, எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர். ஹோலி கொண்டாட்டம் இது போன்ற விபரீதத்தில் முடிந்தது அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இதன் காரணமாக அங்கு சமூக ஒழுங்கு சீர் கெடாமல் தடுக்க காவல்துறையினர் உஷாருடன் காண்காணித்து வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Holi, Holi Celebration