ஹோம் /நியூஸ் /இந்தியா /

செல்ஃபி மோகம்.. 150 அடி பள்ளத்தில் விழுந்த வருங்கால மனைவி.. சினிமா பாணியில் காப்பாற்றிய மாப்பிள்ளை

செல்ஃபி மோகம்.. 150 அடி பள்ளத்தில் விழுந்த வருங்கால மனைவி.. சினிமா பாணியில் காப்பாற்றிய மாப்பிள்ளை

சாந்திராவை காப்பாற்றிய போது..

சாந்திராவை காப்பாற்றிய போது..

கல் குவாரியில் 150 அடி கீழ் தேங்கி இருந்த இடத்தில் செல்ஃபி எடுக்க முயன்றதால் விபரீதம் ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India

கேரளாவில் செல்ஃபி மோகத்தால் கல்குவாரியில் இருந்த 150 பள்ளத்தில் விழுந்த பெண்ணை அவரின் வருக்கால கணவர் காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பரவூரை சேர்ந்தவர் வினு கிருஷ்ணன் (25). துபாயில் பணி செய்துவரும் இவருக்கும் கல்லுவாதுக்கலையை சேர்ந்த சாந்திராவிற்கும் (19) திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

திருமணத்திற்காக 2 வாரங்களுக்கு முன் வினு கிருஷ்ணன் தன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்றைய தினம் இவர்களுக்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அதன் பிறகு வேளமானூர் காட்டுப்புரம் பகுதியில் உள்ள கல்குவாரிக்கு சென்றனர்.

இதையும் படிக்க :  ஷ்ரத்தா கொலை வழக்கில் டிஎன்ஏ சோதனை முடிவுகள் தயார் - டெல்லி காவல்துறை தகவல்

அந்த கல்குவாரியில் 150 அடி உயரத்திற்கு கீழ் தண்ணீர் தேங்கி இருந்தது. அந்த இடத்தை பார்த்ததும் அவர்கள் இருவரும் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு புகைப்படம் எடுத்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கால் வழுக்கி சந்திரா 150 அடி உயரத்தில் இருந்து தேங்கி இருந்த தண்ணீருக்குள் விழுந்தார்.

இதைதொடர்ந்து தன் வருங்கால மனைவியை காப்பாற்ற வினு கிருஷ்ணனும் தண்ணீருக்குள் குதித்து சாந்திராவின் உடையை பிடித்து இழுத்து காப்பாற்றினார். பின் இருவரும் அங்கிருந்த பாறையை பிடித்து “காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்” என சத்தம் போட்டதால், அங்கிருந்த தொழிலாளர்கள் வந்து கயிற்றை இறக்கி அவர்களை காப்பாற்றினர்.

லேசான காயங்களுடன் அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தினால் நேற்று அவர்களுக்கிடையில் நடைபெறவிருந்த திருமணம் தள்ளிவைக்கப்பட்டது.

First published:

Tags: Kerala, Marriage, Quarry, Selfie