• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த தந்தை - போலீஸாரை மிரள வைத்த வாக்குமூலம்

மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த தந்தை - போலீஸாரை மிரள வைத்த வாக்குமூலம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த 55 வயது நபர் ஒருவர் பெற்ற மகள் என்றும் பாராமல் அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்.

  • Share this:
    காதல் திருமணம் செய்துக்கொண்ட மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

    மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இளம்பெண் மற்றும் அவரது 5 மாத குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. வனத்துறை அளித்த தகவலின் பேரில் போலீஸார் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். முதலில் இதனை கொலை வழக்காக பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் இளம்பெண் கொலை செய்யப்படுவதற்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது.

    காட்டுப்பகுதிக்கு இளம்பெண் யாருடன் வந்தார்.. குழந்தை இறந்தது எப்படி.. இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டு குழந்தையையும் கொன்றார்களா என பல்வேறு கேள்விகள் போலீஸாருக்கு இருந்தது. இருவரும் இறந்து  10 நாள்களுக்கு மேல் இருக்கும் என்பதால் உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதன்காரணமாக அடையாளம் காண்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.

    அந்தப்பகுதியில் காணாமல் போனவர்களின் விவரங்கள் குறித்து போலீஸார் சேகரித்தனர். அதில் எந்த தடயமும் போலீஸாருக்கு கிடைக்கவில்லை. சமூகவலைதளத்தில் இதுகுறித்து போலீஸார் பதிவிட்டனர். சமூகவலைதளத்தில் இளம்பெண் போட்டோ பரவியதும் அந்தப்பெண் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு  முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துக்கொண்ட இளம்பெண் என்ற தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. அந்த இளம்பெண்ணின் கணவர் சத்திஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இருப்பது தெரியவந்தது. கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அந்தப்பெண் கணவனிடம் கோபித்துக்கொண்டு தனது மூத்த சகோதரி வீட்டுக்கு வந்துள்ளார்.

    Also Read:  கூகுள் பே கொள்ளையர்கள்.. ஆவடியில் லிப்ட் கேட்பது போல் இளைஞரை தாக்கி கைவரிசை

    போனில் மிரட்டல்

    மூத்த சகோதரியின் வீட்டின் உரிமையாளர் கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்த இளம்பெண்ணின் கணவர் குறித்து போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார். என் மனைவி மற்றும் குழந்தை எங்கே இருக்கார்கள் எனக் கேட்டு போனில் கொலை மிரட்டல் விடுப்பதாக அந்த புகாரில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அந்த இளம்பெண்ணின் மூத்த சகோதரியை அழைத்துச் சென்றது இறந்தது அந்தப்பெண் தானா என்பதை போலீஸார் உறுதி செய்தனர். அதன்பின்னர் அந்தப்பெண்ணிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அந்தப்பெண்ணின் தந்தையே அவரை கொலை செய்து உடலை காட்டுப்பகுதியில் வீசியதாக கூறியுள்ளார்.  பாலியல் வன்கொடுமை செய்து அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் கூறியுள்ளார்.

    விசாரணையில் வெளிவந்த உண்மை

    அந்தப்பெண் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், “ என் சகோதரி தீபாவளிக்காக என் வீட்டுக்கு குழந்தையுடன் வந்தார். நவம்பர் 4-ம் தேதி மாலை நிமோனியா காய்ச்சல் காரணமாக குழந்தை இறந்தது. இந்த தகவலை அவள் தன் கணவரிடம் தெரிவிக்கவில்லை. எனது தந்தை மற்றும் சகோதரனுக்கு போன் செய்து குழந்தை இறந்த தகவலை தெரிவித்தோம். குழந்தைக்கு இறுதிச்சடங்கு செய்வதற்காக இருவரும் வந்தனர். நவம்பர் 5-ம் தேதி இறுதிச்சடங்கு செய்வதற்காக வனப்பகுதிக்கு குழந்தையை எடுத்துக்கொண்டு எனது தந்தை, சகோதரன், சகோதரி மூவரும் சென்றனர். ஆத்திரத்தில் இருந்த எனது தந்தை சகோதரியை கொலை செய்துவிட்டதாக கூறினார்” எனப் போலீஸாரிடம் கூறியுள்ளார்.

    Also Read: கனவில் வந்து மிரட்டிய பேய்.. காவலர் தூக்கிட்டு தற்கொலை - நடந்தது என்ன?

    இதனையடுத்து அந்தப்பெண்ணின் தந்தை மற்றும் சகோதரனை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  முதலில் அவர்கள் போலீஸாரை திசை திருப்ப முயன்றுள்ளனர். பின்னர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். அவரது தந்தை பல்வேறு திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய போலீஸ் அதிகாரிகள்,  இளம்பெண் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துக்கொண்டார். இதன்காரணமாக உறவினர்கள் யாரும் வீட்டுக்கு வருவதில்லை அவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை.இதன்காரணமாக மகள் மீது மிகுந்த ஆத்திரத்தில் இருந்துள்ளார்.மூத்த மகள் வீட்டில் இருப்பதை அறிந்ததும். மிகுந்த ஆத்திரத்துடன் அவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்றுள்ளார்.

    Also Read: சந்தேக புத்திக்கொண்ட கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடுமை

    குழந்தையின் சடலத்தை புதைக்க காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர். அவர்கள் சென்ற வாகனத்தை பார்த்துக்கொள்ளுமாறு அவரது மகனிடம் கூறி நிறுத்தி வைத்துள்ளார். மகளையும் இறந்த குழந்தையின் சடலத்தையும் எடுத்துக்கொண்டு வனத்தின் அடர்ந்த பகுதிக்கு சென்றுள்ளனர். நடந்து போகும்போது வீட்டை விட்டு வெளியேறி சென்றது குறித்து பேசி சண்டைப்போட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் மகளை கடுமையாக தாக்கியுள்ளார். பெற்ற மகள் என்றும் பாராமல் அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். மகன் மற்றும் மூத்த மகளிடம் கொலை செய்ததை மட்டும் கூறியுள்ளார். பாலியல் வன்கொடுமை செய்ததை கூறவில்லை” என்றனர். இருவரையும் கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: