மாமியாரை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற மருமகன்

news18
Updated: September 12, 2018, 12:07 PM IST
மாமியாரை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற மருமகன்
மாதிரிப் படம்
news18
Updated: September 12, 2018, 12:07 PM IST
மாமியாரை மாடியில் இருந்து தள்ளிவிட்டு மருமகனே கொன்ற கொடூரம் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே கோட்பந்தர் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் முதல் மாடி வீட்டில் வசிப்பவர் அங்குஷ் பத்தி (32). இவரது மனைவி  வாய் பேசவும், காது கேட்கவும் முடியாத மாற்றுத்திறனாளி ஆவார்.  இதனால், அங்குஷ் தனது மனைவியை அடிக்கடி அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

அங்குஷின் மாமியார் கமல்ஜித் கவுர் (68) இதைக் கண்டித்து வந்திருக்கிறார். நேற்று முன் தினம் காலையிலும் அங்குஷ் வழக்கம் போல தனது மனைவியை அடித்து உதைத்திருக்கிறார். இதுபற்றி கேள்விபட்ட கமல்ஜித் கவுர் மாலையில் மகள் வீட்டுக்கு வந்து மருமகன் அங்குஷை கண்டித்தார்.

மாதிரிப் படம்


அவர்கள் இருவரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கடும் ஆத்திரத்துக்குள்ளான அங்குஷ், கமல்ஜித் கவுரை தாக்கி முதல் மாடியின் பால்கனியிலிருந்து கீழே தள்ளி விட்டார். கீழே விழுந்த கமல் ஜித் கவுர் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி அந்த கட்டிடத்தில் குடியிருப்பவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அங்குஷை கைது செய்தனர். கமல்ஜித் கவுரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
First published: September 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்