ஹோம் /நியூஸ் /இந்தியா /

மனைவியின் புகைப்படத்தை வைத்து விஷமம் செய்த கணவன்!

மனைவியின் புகைப்படத்தை வைத்து விஷமம் செய்த கணவன்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

காதல் திருமணம் செய்து மனம் ஒத்துப்போகாததால் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், மனைவியின் புகைப்படம், மொபைல் நம்பரை ஆபாச இணையதளத்தில் கணவன் பதிவேற்றியுள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

நொய்டாவில் குடும்பத்தகராறு காரணமாக மனைவியின் புகைப்படம், மொபைல் நம்பரை ஆபாச இணையத்தில் பதிவிட்ட கணவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவரும் நபர், குடும்பத்தகராறு காரணமாக தனது மனைவியின் புகைப்படம் மற்றும் மொபைல் நம்பரை ஆபாச இணையதளத்தில் பதிவிட்டு, அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து மனைவிக்கு அனுப்பியுள்ளார்.

கணவனின் செயலால் அதிர்ச்சி அடைந்த மனைவி போலீசில் புகாரளித்துள்ளார். புகாரை அடுத்து, கணவன் மீது பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வழக்குப்பதிவு காரணமாக தலைமறைவாகியுள்ள அவரது இடத்தில் போலீசார் நடத்திய சோதனையில், இரண்டு மொபைல் போன்கள் கிடைத்துள்ளது.

“பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனுக்கு ஸ்கிரீன் ஷாட்டுகள் கைப்பற்றப்பட்ட போனில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. தப்பியோடிய நபரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது” என்று போலீசார் கூறியுள்ளனர்.

2011-ம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர்கள் இருவரும், மனம் ஒத்துப்போகாததால் கடந்த 10 மாதங்களாக பிரிந்து வசித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also See.. 

Published by:Sankar
First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Noida