ஹோம் /நியூஸ் /இந்தியா /

தற்கொலை செய்து கொண்ட காதலியைப் பார்க்க வந்த காதலன் வெட்டிக்கொலை..!

தற்கொலை செய்து கொண்ட காதலியைப் பார்க்க வந்த காதலன் வெட்டிக்கொலை..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

2 தனிப்படை அமைத்து புதுச்சேரி போலீசார் விசாரணை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

புதுச்சேரியை அடுத்த கோட்டக்குப்பம் பகுதியில் காதலியின் இறப்பு செய்தி கேட்டு ஊருக்கு வந்த காதலன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

ஐதராபாத்தில் கணினி பொறியாளராக பணியாற்றி வரும் கோட்டகுப்பத்தை சேர்ந்த ராகவனும், அதே பகுதியை சேர்ந்த அருணா என்ற பெண்ணும் காதலித்தனர். இவர்களின் காதலை அருணாவின் பெற்றோர் ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சமூக வலைதளம் மூலம் காதலர்கள் தொடர்பில் இருந்ததை கண்டித்ததால் அருணா இரு நாட்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து கோட்டகுப்பம் வந்த ராகவனை நான்கு பேர் கொண்ட கும்பல் கடத்திச்சென்று கோட்டைமேடு பகுதியில் வெட்டி படுகொலை செய்துள்ளது. இந்த கொலை குறித்து 2 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Honour killing, Hyderabad, Love issue