ஹோம் /நியூஸ் /இந்தியா /

உயிரிழந்த காதலியை திருமணம் செய்த காதலர்.. வாழ்நாளில் வேறு பெண் இல்லை என உறுதிமொழி - வைரலாகும் வீடியோ

உயிரிழந்த காதலியை திருமணம் செய்த காதலர்.. வாழ்நாளில் வேறு பெண் இல்லை என உறுதிமொழி - வைரலாகும் வீடியோ

பிடுப்பன் - பிராத்தனா காதல் ஜோடி

பிடுப்பன் - பிராத்தனா காதல் ஜோடி

சில நாட்களுக்கு முன்பு, பிராத்தனாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனே அவர் கவுஹாத்தியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பிராத்தனா உயிரிழந்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Assam, India

  அசாமில் தனது இறத்த காதலியை திருமணம் செய்து கொண்ட இளைஞரின் வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

  அசாமில் பிடுப்பன் என்ற இளைஞரும் பிராத்தனா என்ற பெண்ணும் பல நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலித்து வந்தது இருவீட்டாருக்கும் தெரிய வந்தது. பின்னர், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இரு வீட்டாரும் சம்மதித்தனர்.

  ஆனால் சில நாட்களுக்கு முன்பு, பிராத்தனாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனே அவர் கவுஹாத்தியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பிராத்தனா உயிரிழந்தார்.

  இதையும் படிக்க : ரியல் ஹீரோக்களை திருமணத்துக்கு அழைத்த கேரள புதுமண தம்பதி - இன்ஸ்டாவில் வாழ்த்திய இந்திய இராணுவம்..

  இதையறிந்த அவரது காதலன் பிடுப்பன், கல்யானம் செய்வதற்கான பொருட்களுடன் காதலி பிராத்தனாவின் வீட்டிற்கு வந்தார். அவர் வந்தவுடன், அவர் பிராத்தனாவை திருமணம் செய்துகொள்ளப்போவதாக அங்கிருந்தவர்களுக்கு அறிவித்தார். அங்கிருந்தவர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து போய் நின்றனர்.

  பின் அவர் வைத்திருந்த குங்குமத்தை, பிராத்தனாவின் முகத்தில் தடவி கல்யாணத்திற்கான சடங்கை செய்தார். தொடர்ந்து மாலையை காதலிக்கு போட்டு, பிராத்தனாவின் உடலில் வைத்து மற்றொரு மாலையை இவர் போட்டுக்கொண்டார். அவர் செய்த அனைத்து சடங்குகளின் போதும், அவர் அழுதுகொண்டே செய்யும் காட்சிகள் வீடியோவில் பார்க்கமுடிகிறது. மேலும் அந்த இளைஞர் வாழ்க்கை முழுவதும் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என உறுதிமொழியும் எடுத்துள்ளார்.

  “நாங்கள் பிராத்தனாவை காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்தோம். ஆனால் அது முடியவில்லை. பிடுப்பன் அவளை திருமணம் செய்துகொள்வதாக தெரிவித்த போது எங்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்த அளவிற்கு ஒரு பெண்னை ஒருவர் எப்படி காதலிக்க முடியும் என்று எங்களுக்கு வியப்பாக இருக்கிறது” என்று பிராத்தனாவின் சகோதரர் சுபான் தெரிவித்தார்

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Assam, Boy Friend, Girl dead