Home /News /national /

உஷார்! போலி வேலைவாய்ப்பு விளம்பரத்தை நம்பி ரூ.19,000 இழந்த இளைஞர்!

உஷார்! போலி வேலைவாய்ப்பு விளம்பரத்தை நம்பி ரூ.19,000 இழந்த இளைஞர்!

காட்சி படம்

காட்சி படம்

போலி இணையதளத்தில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பித்து ரூ.19,000 பணத்தை இளைஞர் உருவர் இழந்துள்ளார்.

டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அதற்கான பதிவுக் கட்டணமாக ரூ.19,000 செலுத்தி ஏமாந்துள்ளார் இளைஞர் ஒருவர். மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் வேலை இருப்பதாக சமூக ஊடகங்களில் போலியான விளம்பரத்தை பரவ விட்டதன் மூலமாக இந்த மோசடி அரங்கேறியுள்ளது.

இதுதொடர்பாக மூன்று நபர்களை டெல்லி மாநகர காவல் துறையினர் கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்த நிதின் சிங், சுமந்த் குமார் (39) ஆகிய இருவரும், டெல்லியின் நியூ அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த முகம்மது ஷா நவாஸ் (23) என்பவரும் சேர்த்து மொத்தம் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புகார் அளித்த இளைஞர்:

டெல்லி சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்த பூபேந்தர் சிங் (21) என்ற இளைஞர் காவல் துறையில் புகார் அளித்தார். டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் வேலை இருப்பதாகக் கூறப்பட்ட போலியான விளம்பரத்தை பார்த்து ஏமாந்து விட்டதாக அவர் தனது புகார் மனுவில் கூறியிருந்தார்.

சமூக வலைதளங்களில் வெளியான, போலி வேலைவாய்ப்பு லிங்க்-ஐ கிளிக் செய்து விவரங்களை உள்ளீடு செய்த பிறகு அந்த இளைஞரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு மற்றொரு லிங்க் வந்துள்ளது. அதனை டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் இணையதள லிங்க் என்று அவர் கருதிக் கொண்டார்.

also read : ஒரு துண்டு பிரெட்டில் இப்படி ஒரு ஓவியமா! வைரல் வீடியோ..

ரூ.49 தான் கட்டணம், ஆனால் மோசடி ரூ.19,049:

போலி இணையதளத்தில் வேலைவாய்ப்புக்கு பூபேந்தர் சிங் விண்ணப்பித்த போது முதலில் பதிவுக் கட்டணமாக ரூ.49 செலுத்துமாறு மெசேஜ் வந்தது. அதன்படி டெபிட் கார்டு விவரங்களை உள்ளீடு செய்து ரூ.49 கட்டணத்தை செலுத்துவதற்கான பரிவர்த்தனையை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு ஓடிபி வந்தது. அந்த ஓடிபி-ஐ உள்ளீடு செய்த உடன் அவரது பேங்க் அக்கவுண்டில் இருந்து ரூ.19,049 பிடித்தம் செய்யப்ப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக பூபேந்தர் சிங் அளித்த புகாரின் பேரில் விசாரணையை மேற்கொண்ட காவல் துறையினர், தற்போது 3 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

also read : உதவி ரகசிய அதிகாரிப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்- 150 பணியிடங்கள்

மோசடி நடந்தது எப்படி?

மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட நிதினிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், பல்வேறு கால் சென்டர்களில் பணி புரிந்துள்ள அவர், வேலை தேடுவோரை எப்படி அணுகி ஏமாற்றலாம் என்பது குறித்து அங்கு கற்றுக் கொண்டதாக கூறியுள்ளார்.

சமூக வலைதளங்களில் டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் பெயரில் பேஜ் ஒன்றை தொடங்கியதையும், அதைப் பார்த்து வருவோரிடம் வாட்ஸ் அப் மூலமாக வலை விரித்து பணம் பறித்ததையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு விவரங்கள் அல்லது இதர வாலட் விவரங்களைப் பயன்படுத்தி மோசடி செய்துள்ளனர்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Job, Metro Rail

அடுத்த செய்தி