கர்நாடகா மாநிலம் மைசூர் மாவட்டத்தின் காவிபிபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக். இவர் கேப் டிரைவராக பயணியாற்றி வருகிறார். இவரது மனைவி வனஜாக்ஷி (31). இவர்களுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இருவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில், அசோக் - வனஜாக்ஷி தம்பதிக்கு கடந்த சில காலமாகவே செல்போன் பயன்படுத்துவது தொடர்பாக தகராறு எழுந்துள்ளது.வனஜாக்ஷி செல்போனுக்கு அடிமையாக அதிகமாக அதை பயன்படுத்தவதாக கணவர் தொடர்ந்து அவரிடம் சண்டையிட்டு வந்துள்ளார். இந்த சண்டை கடந்த ஞாயிற்றுக் கிழமை உச்சம் அடைந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று வனஜாக்ஷி யாரிடமோ நீண்ட நேரம் செல்போனில் பேசியுள்ளார்.
கணவர் அசோக்கிற்கு மனைவியின் நடத்தை மீதும் சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த அசோக் மனைவியை அறைந்துள்ளார். மனைவியும் கோபத்தில் சமையல் அறைக்குச் சென்று உருட்டுக்கட்டையை எடுத்துவந்து கணவர் அசோக்கை அடிக்க முயன்றுள்ளார்.
இதையும் படிங்க:
ஆந்திராவில் கிராம மக்களுக்கு 2 வாரம் லாக்டவுன்... கொரோனாவை விட கொடிய காரணம்
ஆனால், சுதாரித்த கணவர் அசோக், மனைவியின் பிடியில் இருந்து உருட்டுக் கட்டையை பிடுங்கி, இவர் பதிலுக்கு வேகமாக அடித்துள்ளார். இதில் மயங்கி விழுந்த மனைவி சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் கடந்த புதன் கிழமை தான் வெளியே தெரிந்துள்ளது. வனஜாக்ஷியின் சகோதரர் அவரின் வீட்டிற்கு வந்து பார்த்த போது சகோதரியின் மரணம் தெரியவர காவல்துறையிடம் புகார் தகவல் அளித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை வழக்கு பதிவு செய்து கணவரை கைது செய்துள்ளது. செல்போன் காரணமாக கணவர் மனைவியை அடித்துக் கொன்ற சம்பவம் மைசூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.