சாமியாருடன் உடலுறவுக்கு மறுத்த மனைவியை கொன்ற கணவர்!

சாமியார் ஏற்கனவே ஹெராயின் வைத்திருந்த குற்றத்துக்காக போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

news18
Updated: June 16, 2019, 1:31 PM IST
சாமியாருடன் உடலுறவுக்கு மறுத்த மனைவியை கொன்ற கணவர்!
கைதான கணவர் மற்றும் சாமியார்
news18
Updated: June 16, 2019, 1:31 PM IST
பணக்காரராக மாற்றிக்காட்டுகிறேன் என்று சாமியார் கூறியதன் பேரில், சாமியாருடன் உடலுறவுக்கு மறுத்த மனைவியை கணவர் நீரில் மூழ்கடித்து கொன்றுள்ள சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ரா அருகே உள்ள அலிகார் பகுதியைச் சேர்ந்தவர் மான்பால் சிங். சமீபத்தில் அங்குள்ள சாமியார் சந்தாஸ் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் அடிக்கடி ஒன்றாக கஞ்சா அடித்து வந்த நிலையில், உனது மனைவியை என்னுடன் உடலுறவு கொள்ள சம்மதித்தால் உன்னை பணக்காரராக மாற்றிக்காட்டுகிறேன் என்று சாமியார் மான்பாலிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய மான்பால் தனது மனைவி ரஜ்னியை சாமியாருடன் உடலுறவு வைத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தி வந்துள்ளார்.

இதனை ரஜ்னி தனது சகோதரிடம் கூற, அவர் மான்பாலை எச்சரித்துள்ளார். இந்நிலையில், கங்கை நதியில் பூஜை என்று அழைத்துச் சென்று ரஜ்னியை, மான்பால் நீரில் மூழ்கடித்துக்கொன்றுள்ளதாக ரஜ்னியின் சகோதரர் போலீசில் புகாரளித்தார்.

புகாரின் பெயரில் கங்கை நதியில் தேடுதல் நடத்தி ரஜ்னியின் சடலத்தை போலீசார் மீட்டனர். மேலும், கொலைக்குற்றம் தொடர்பாக மான்பால் மற்றும் சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சாமியார் ஏற்கனவே ஹெராயின் வைத்திருந்த குற்றத்துக்காக போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

First published: June 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...