• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • குளித்து முடித்த கணவருக்கு துண்டு கொடுக்காததால் மனைவி கொலை..

குளித்து முடித்த கணவருக்கு துண்டு கொடுக்காததால் மனைவி கொலை..

Murder

Murder

சமையலறையில், பாத்திரங்களை கழுவுவதில் ஈடுபட்டிருந்த அவரது மனைவி புஷ்பா, தன் கணவரிடம் சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறியிருக்கிறார்.

  • Share this:
குளித்து முடித்த பின்னர் மனைவி துண்டு கொண்டு வந்து கொடுக்க தாமதமானதால் ஆத்திரத்தில் அவரை கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கணவன், மனைவிக்கு இடையிலான பிரச்னைகளும், அதனால் ஏற்படும் விபரீதங்களுக்கும் முடிவே இல்லை என்பது போல தெரிகிறது.. சிறிய பிரச்னைகள் கூட பெரிய அசம்பாவிதத்துக்கு காரணமாக அமைந்துவிடுவதை பார்க்கும் போது அந்த பிரச்னைகளை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டால் எவ்வளவு பெரிய விஷயங்கலையும், விபரீதங்களையும் தவிர்த்துவிட முடியும் என்பதை இந்த சம்பவத்தின் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

மத்திய பிரதேச மாநிலம் பாலாகாட் மாவட்டத்தில் உள்ள ஹிராபூர் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயதாகும் ராஜ்குமார் பாஹே. இவர் வனத்துறையில் தினக்கூலியாக பணியாற்றி வருகிறார். கடந்த சனிக்கிழமையன்று மாலை ராஜ்குமார் குளியலறைக்கு சென்று குளித்திருக்கிறார். பின்னர் அவர் தனது மனைவி புஷ்பா பாயிடம் (வயது 46) துண்டு எடுத்துவந்து தருமாறு கேட்டிருக்கிறார்.

Also read:  தேவருக்கு அவமதிப்பு.. நடிகர் விஜய் சேதுபதியை எட்டி உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு – அர்ஜூன் சம்பத் அறிவிப்பால் சர்ச்சை

ஆனால் சமையலறையில், பாத்திரங்களை கழுவுவதில் ஈடுபட்டிருந்த அவரது மனைவி புஷ்பா, தன் கணவரிடம் சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறியிருக்கிறார். ஆனால் தன் மனைவி தன்னை காத்திருக்க வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த ராஜ்குமார், கோவத்தில் வெளியே வந்து அவரின் மனைவியுடன் சண்டை போட்டிருக்கிறார்.

மனைவியும் பதிலுக்கு பேச இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. காத்திருந்ததால் கோவம் தலைக்கேறிய கணவர் ராஜ்குமார், அங்கிருந்த மண்வெட்டியை எடுத்து தன்னுடைய மனைவியின் தலையில் பல முறை அடித்திருக்கிறார். மேலும் தடுக்க வந்த அவருடைய 23 வயது மகளையும், ராஜ்குமார் மிரட்டியிருக்கிறார்.

Also read:  நாக்கை 4 துண்டாக வெட்டி விடுவேன்: பாஜக தலைவருக்கு தெலங்கானா முதல்வர் பகிரங்க மிரட்டல்

தொடர்ந்து மண்வெட்டியால் அடித்ததில் புஷ்பா பரிதாபமாக சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். பின்னர் பயந்து போன ராஜ்குமார் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார். விஷயம் அறிந்து அங்கு அந்த காவல்துறையினர் புஷ்பாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பின்னர் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

இதனிடையே தலைமறைவாக இருந்த ராஜ்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த கொலை குறித்து ராஜ்குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: