Home /News /national /

மனைவியை ரயிலில் தள்ளி கொலை செய்த கணவர்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்

மனைவியை ரயிலில் தள்ளி கொலை செய்த கணவர்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து அங்கு தங்கி வருவதாகவும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டதாகவும் கூறினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mumbai, India
    மும்பை வசய் ரயில் நிலையத்தில், மனைவியை ரயிலில் தள்ளி கொலை செய்துவிட்டு, தனது 2 குழந்தைகளுடன் தப்பியோடிய நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    மஹராஷ்டிரா பல்கர் மாவட்டத்தில் உள்ள வசய் ரயில் நிலையத்தின் நடைமேடையில், பெண் ஒருவர் தனது இரு குழந்தைகளுடன் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த அந்த பெண்ணின் கணவர், ரயில் வரும் நேரம் பார்த்து, அவரை நடைமேடையில் இருந்து இழுத்து சென்று, தண்டவாளத்தில் தள்ளிவிட்டார். அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து பெண்ணின் கணவர், அங்கு உறங்கிக்கொண்டிருந்த 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ரயில் நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து மும்பையில் உள்ள DADAR பகுதிக்கு ரயில் மூலம் தப்பிச்சென்று அங்கிருந்து கல்யான் பகுதிக்கு சென்றதாக தெரிய வந்தது. 

    Also Read:  ஒரே வருடத்தில் கசந்த காதல் திருமணம்.. வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை - கடிதம் சிக்கியது

     



     




    View this post on Instagram





     

    A post shared by News18.com (@cnnnews18)






    இதுகுறித்து வசய் ரயில்வே காவல்துறையிடம் கேட்டபோது, அவர்கள் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து அங்கு தங்கி வருவதாகவும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டதாகவும் கூறினர். மேலும் அந்த நபரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கல்யான் ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ பிடித்து தப்பிச் சென்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இதுவரை அவர்களில் பெயர், வயது போன்ற தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் கூறினர்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Crime News, Mumbai, Murder

    அடுத்த செய்தி