முகப்பு /செய்தி /இந்தியா / துண்டு துண்டாக்கப்பட்ட இளம்பெண்.. திருமணமான பெண்ணை கொலை செய்த காதலன்.. ராஜஸ்தானை அதிர வைத்த சம்பவம்!

துண்டு துண்டாக்கப்பட்ட இளம்பெண்.. திருமணமான பெண்ணை கொலை செய்த காதலன்.. ராஜஸ்தானை அதிர வைத்த சம்பவம்!

காதலனால் கொலை செய்யப்பட்ட இளம்பெண்

காதலனால் கொலை செய்யப்பட்ட இளம்பெண்

ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய காதலியை அவரது காதலர் கொலை செய்து பல துண்டுகளாக வெட்டி வீசிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Rajasthan, India

ராஜஸ்தானின் நாகவுரில் உள்ள பலாசார் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் குட்டி(Guddi). திருமணமான இந்த இளம்பெண் கடந்த மாதம் தாய் வீட்டிற்கு வந்த நிலையில், ஜனவரி 20ஆம் தேதி அன்று கணவர் வீட்டிற்கு செல்வதாகக் கூறி அங்கிருந்து வெளியேறியுள்ளார். ஆனால், அவர் கணவர் வீட்டிற்கு செல்லாமல் மாயமானார். அவரது செல்போனும் சுவிட்ஸ் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் கணவர் வீட்டார் காவல்நிலையத்தை அனுகி புகார் அளித்தனர்.

காவல்துறை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கியது. அப்போது தான், ஜனவரி 28ஆம் தேதி அன்று நாகவுரில் உள்ள மால்வா ரோடு பகுதியில் மாயமான பெண்ணின் உடைகள், தலை முடி, உடலின் சில பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறை கொலை வழக்கு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டது. அப்போது தான் அதிர்ச்சி உண்மை அம்பலமானது.

கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த அனோப்ராம் என்ற நபருக்கும் ஏற்கனவே காதல் இருந்துள்ளது. பெண்ணுக்கு வேறொரு நபருடன் திருமணமான பின்பும் காதல் தொடர்ந்துள்ளது. அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தனது காதலனை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். சம்பவ தினத்தன்றும் கணவர் வீட்டிற்கு செல்வதாகக் கூறி அவர், காதலனை பார்க்க சென்றுள்ளார்.

இதையும் படிங்க: திருமணமாகி 2 ஆண்டுகளுக்குப் பின்னும் காதலை மறவாத பெண்... காதலனுடன் விஷம் குடித்து தற்கொலை

அப்போது திருமணம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெண்ணை கொலை செய்த அனோப்ராம், அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி கிணறு உள்ளிட்ட பல இடங்களில் வீசியுள்ளார். கொலையாளி அனோப்ராமை கைது செய்த காவல்துறையினர், வீசப்பட்ட பெண்ணின் உடல் பாகங்களை மீட்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளன. ஏற்கனவே, டெல்லியில் லிவ் இன் உறவில் இருந்த பெண் ஷ்ரத்தா வாக்கர் தனது காதலனால் கொலை செய்யப்பட்ட பல துண்டுகளாக வீசப்பட்டார். அதே பாணி கொலை சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.

First published:

Tags: Crime News, Extramarital affair, Murder, Rajasthan