ஹோம் /நியூஸ் /இந்தியா /

காதலியை கொன்று இன்ஸ்டாவில் வீடியோ.. இளைஞரின் கொடூர செயல் - ம.பி-யில் அதிர்ச்சி

காதலியை கொன்று இன்ஸ்டாவில் வீடியோ.. இளைஞரின் கொடூர செயல் - ம.பி-யில் அதிர்ச்சி

காதலியை கொலை செய்து இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்ட இளைஞர்

காதலியை கொலை செய்து இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்ட இளைஞர்

காதலியை கழுத்தறுத்து கொலை செய்த வாலிபர் அதை இன்ஸ்டாகிராமில் பதிவேற்ற அதிர்ச்சி சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Madhya Pradesh, India

  மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில் உள்ள தனியார் விடுதி அறை ஒன்றில் இளம் பெண் ஒருவர் இரு நாள்களுக்கு முன்பு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பெண்ணின் உடலை மீட்டு காவல்துறை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், கொலை தொடர்பான விசாரணை தொடங்கியுள்ளனர். பின்னர், சிறிது நேரத்திலேயே இந்த கொலையைச் செய்த வாலிபர் அதை வாக்குமூலமாக பதிவிட்ட வீடியோ வைரலானது.

  குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அபிஜித்திற்கும் மத்தியப் பிரதேசம் ஜபல்பூரைச் சேர்ந்த சில்பா என்ற இளம் பெண்ணுக்கு சமூகவலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. இருவரும் நீண்ட நாள்களாக பழகி வந்த நிலையில், அபிஜித்தின் பிசினஸ் பார்ட்னர் உடன் சில்பா நெருக்கமாக பழகத் தொடங்கியுள்ளார். இந்நிலையில், காதலி சில்பா இருவரிடமும் நைசாக ஆசை வார்த்தைகளைப் பேசி ரூ.12 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்ற முயன்றதாக கொலையாளி அபிஜித் தெரிவித்துள்ளார்.

  சில்பாவின் மோசடி வேலை அபிஜித் மற்றும் அவரது கூட்டாளிக்கு தெரியவர ஆத்திரத்தில் அந்த பெண்ணை கொலை செய்ய அபிஜித் திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக ஜபல்பூர் வந்த அபிஜித் அங்குள்ள தனியார் விடுதியில் ரூம் எடுத்து தங்கி சில்பாவை வரவழைத்துள்ளார். அங்கு வந்த சில்பாவை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் துடிக்கும் சில்பாவை வீடியோ எடுத்த அபிஜித், தன்னை ஏமாற்றியதற்காகத்தான் இந்த கொலையை செய்தேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

  இதையும் படிங்க: மாணவியின் ஹால் டிக்கெட்டில் சன்னி லியோனின் கவர்ச்சி படம்.... பிரவுசிங் சென்டரில் போட்டோ அப்ளை பண்ணும்போது உஷார்

  இந்த வீடியோவை அபிஜித் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நிலையில் அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவத் தொடங்கியது.இந்நிலையில், கொலை செய்துவிட்டுத் தலைமறைவாக உள்ள அபிஜித்தை தேடிப் பிடிக்க நான்கு சிறப்பு தனிப்படையை ஜபல்பூர் மாவட்ட காவல்துறை அமைத்துள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Crime News, Instagram, Madhya pradesh, Murder case