Home /News /national /

300 ரூபாய்காக கடைக்காரர் படுகொலை - ரயில் டிக்கெட் ரத்து கட்டணத்தை திரும்ப கேட்டு சகோதரர்கள் வெறிச்செயல்!

300 ரூபாய்காக கடைக்காரர் படுகொலை - ரயில் டிக்கெட் ரத்து கட்டணத்தை திரும்ப கேட்டு சகோதரர்கள் வெறிச்செயல்!

Representational image

Representational image

நகுலும், அருணும் தாங்கள் வந்திருந்த மாருதி ஸ்விஃப்ட் காரை ரிவர்ஸ் எடுத்து கடையில் இருந்த நிதினை காரால் ஏற்றியுள்ளனர்.

    ரயில் டிக்கெட் ரத்து செய்ததற்கு 300 ரூபாய் கட்டணம் பிடித்தம் செய்ததை மீண்டும் தருமாறு கேட்டு தகராறு செய்த இருவர், கடைக்காரரை காரை ஏற்றி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    டெல்லி அருகாமையில் அமைந்துள்ள கிரேட்டர் நொய்டா நகரின் எக்கோடெக் - 1 பகுதியில் செயல்பட்டு வந்த கடையின் உரிமையாளர்  ஒருவரிடம் தகராறு செய்த இளைஞர்கள் இருவர் ஆத்திரத்தில், காரை மோதச் செய்து கடையில் வைத்தே கடைக்காரரை படுகொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

    எக்கோடெக் - 1 பகுதியில் மொபைல் விற்பனை கடை வைத்து நடத்தி வந்தவர் நிதின் சர்மா (வயது 30). இவர் தனது கடையில் ரயில் டிக்கெட் புக்கிங் செய்து தரும் பணியையும் செய்து வந்தார். இவரின் கடைக்கு சில வாரங்களுக்கு முன் கர்பாரா கிராமத்தைச் சேர்ந்த நகுல் சிங் மற்றும் அவரின் சகோதரர் வந்து, ஜம்முவுக்கு செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.

    Also read:  கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ₹ 50,000 இழப்பீடு : ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

    இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மீண்டும் நிதின் சர்மாவின் கடைக்கு வந்த நகுல் சிங் மற்றும் அவரின் சகோதரர் அருண் சிங் ஆகியோர் தாங்கள் புக் செய்திருந்த ரயில் டிக்கெட்டை ரத்து செய்துள்ளனர். இதற்காக ரயில் டிக்கெட் ரத்து கட்டணம் (Cancellation charges) 300 ரூபாயை கடைக்காரர் நிதின் சர்மா பிடித்தம் செய்துள்ளார்.

    ஆனால் இந்த 300 ரூபாயை பிடித்தம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த சகோதரர்கள் நகுல் மற்றும் அருண் ஆகியோர், கடைக்காரர் நிதினுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் முற்றிய நிலையில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் நகுலும், அருணும் தாங்கள் வந்திருந்த மாருதி ஸ்விஃப்ட் காரை ரிவர்ஸ் எடுத்து கடையில் இருந்த நிதினை காரால் ஏற்றியுள்ளனர். இது போல 2, 3 முறை காரை ரிவர்ஸ் எடுத்து நிதினை கடையில் வைத்தே நசுக்கியிருக்கின்றனர் அச்சகோதரர்கள்.

    Also read:  4 பெண்களை நிர்வாணமாக்கி, குச்சிகளால் அடித்து கடைவீதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்ற கும்பல்

    இந்த சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் கடைக்காரர் நிதின் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து நிதினை கார் ஏற்றி கொலை செய்த சகோதரர்கள் இருவர் மீது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், கார்பரா கிராமத்தில் காரில் சென்றுகொண்டிருந்த சகோதரர்களில் ஒருவரான நகுலை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மற்றொரு சகோதரரான அருணை போலீசார் தேடி வருகின்றனர்.

    300 ரூபாய் பிரச்னைக்காக கடைக்காரர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாகியிருக்கிறது.
    Published by:Arun
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Murder

    அடுத்த செய்தி