மகள்களிடம் தவறாக நடக்க முயற்சித்த கணவனை எரித்துகொன்ற மனைவி

மாதிரிப் படம்

கஹன் அகர்வால் நாள்தோறும் குடித்துவிட்டு வந்த மகள்களிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், அதனால் ஆத்திரமடைந்து அவரை கொலை செய்துவிட்டதாகவும் நவுசீன் பேகம் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஹைதராபாத்தில் மகள்களிடம் தவறாக நடக்க முயற்சி செய்த கணவரை, வீட்டிலேயே கொலை செய்து எரித்த மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஹைதராபாத் நகரில் வனஸ்தாளிபுரம் பகுதியில் கஹன் அகர்வால், தனது இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்தார். 38 வயதான கஹன் அகர்வால், தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் நவுசீன் பேகத்தை (Nausheen Begum) 2வதாக திருமணம் செய்துள்ளார். நவுசீன் பேகமும் ஏற்கனவே திருமணமாகி 5 குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில், முதல் கணவருடன் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், அவரை பிரிந்து அகர்வாலுடன் கரம்கோர்த்தார்.

சுமார் ஓராண்டுக்கும் மேலாக இருவரும் ஒன்றாக வசித்து வந்தாலும், இருவருக்கும் இடையிலான உறவு என்பது சிறிது காலத்துக்குப் பிறகு சரியில்லை எனக் கூறப்படுகிறது. மதுவுக்கு அடிமையான அகர்வால் தினமும் குடித்துவிட்டு வந்து, நவுசீன் பேகத்தின் முதல் கணவருக்கு பிறந்த பெண் குழந்தைகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த நவுசீன் பேகம், சரியான தருணத்தை எதிர்நோக்கி காத்திருந்துள்ளார். பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி இரவு மதுபோதையில் வீட்டுக்கு சென்ற கஹன் அகர்வால், பெண் குழந்தைகளிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அகர்வாலை கொலை செய்த நவுசீன் பேகம், வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக உடலை வீட்டிலேயே எரித்துள்ளார். பின்னர், வீட்டின் முன்புறத்தில் ஆழமாக குழி தோண்டி புதைத்துள்ளார்.

Also read... ஒரு கோடி வேலைவாய்ப்புகள், லவ் ஜிகாத் சட்டம், : மேற்கு வங்கத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசத் தயாராகும் பாஜக

நாளாக நாளாக அகர்வால் குறித்து அனைவரும் விசாரிக்க தொடங்கியதால், பதற்றமடைந்த நவுசீன் பேகம் எல்.பி நகர் காவல்நிலையத்தில் கணவரைக் காணவில்லை என புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரிக்க தொடங்கிய காவல்துறையினர், அகர்வாலின் முதல் மனைவி மற்றும் தம்பி ஆகியோரிடத்தில் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, நவுசீன் பேகம் மற்றும் அகர்வாலுக்கு இடையே இருந்த சண்டைகளை விளக்கி கூறியுள்ளனர். இதனால், காவல்துறையினர் நவுசீன் பேகத்திடம் விசாரணையை முடுக்கிவிட்டனர். அப்போது, காவல்துறையினருக்கு அதிர்ச்சியான தகவல் கிடைத்தது.

அதாவது, கஹன் அகர்வால் நாள்தோறும் குடித்துவிட்டு வந்த மகள்களிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், அதனால் ஆத்திரமடைந்து அவரை கொலை செய்துவிட்டதாகவும் நவுசீன் பேகம் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். உடலை எரித்து வீட்டிலேயே புதைத்ததையும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, நவுசீன் பேகம் குடியிருந்த வீட்டிற்கு சென்ற காவல்துறையினர், எரிக்கப்பட்ட நிலையில் இருந்த அகர்வாலின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நவுசீன் பேகத்தையும் கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்தனர். கணவரை கொலை செய்து வீட்டிலேயே பெண் ஒருவர் புதைத்த செய்தியை அறிந்த அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: