உத்தரப்பிரதேச மாநிலத்தில் கட்டாய மத மாற்றத் தடை சட்டத்திற்குக் கீழ் முதல் வழக்காக 26 வயது இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் 40,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 4, 2021ம் ஆண்டு டெல்லியில் வைத்து உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது அப்சல் என்ற இளைஞர் வேறு சமூகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியைக் கடத்தியதாக கைது செய்யப்பட்டு கட்டாய மத மாற்றத் தடை சட்டத்திற்குக் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஹசன்பூர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
அப்சல் என்ற அந்த இளைஞன் 16 வயது சிறுமியைக் கடத்தியதாகப் பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வேலைக்குப் போன பெண் திரும்பி வராத நிலையில் இருவரையும் ஒன்றாக வைத்து அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர். மேலும் புகாரில் அந்த பையன் தொடர்ந்து தன் மகளுடன் பேசிவந்துள்ளார் என்றும் அவர் நடத்தும் செடிகள் வளர்ப்பு தோட்டத்திற்கு அப்சல் அடிக்கடி வந்துள்ளான் என்றும் பெண்ணின் தந்தை கூறியுள்ளார்.
Also Read : கர்நாடகாவில் கட்டாய மத மாற்ற தடை சட்டம் நிறைவேற்றம்..!
புகாரைத் தொடர்ந்து அப்சலை டெல்லியில் வைத்துக் கடத்தல் வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இளைஞன் மேல் கட்டாய மத மாற்றுத் தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அந்த வழக்கில் கடந்த சனிக்கிழமை அன்று அம்ரோஹா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் குற்றம் சாட்டப்பட்ட அப்சலுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அம்ரோஹா மாவட்ட நீதிபதி அப்சலுக்கு 40,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jail, Religious conversion, Uttar pradesh