’ஜெய் ஸ்ரீராம்’ சொல்லச் சொல்லி இளைஞரைத் தாக்கிய 10 பேர் கொண்ட கும்பல்!

உச்சகட்டமாக ஜார்கண்ட் மாநிலத்தில் 22 வயதான தப்ரீஸ் அன்சாரி என்ற இஸ்லாமிய இளைஞரை, மரத்தில் கட்டி சுமார் 8 மணி நேரம் இரக்கமின்றி கட்டையால் அடித்துள்ளனர்.

news18
Updated: July 20, 2019, 4:56 PM IST
’ஜெய் ஸ்ரீராம்’ சொல்லச் சொல்லி இளைஞரைத் தாக்கிய 10 பேர் கொண்ட கும்பல்!
மாதிரிப் படம்
news18
Updated: July 20, 2019, 4:56 PM IST
மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் இஸ்லாமிய இளைஞர் ஒருவரை, 10 கொண்ட கும்பல் ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி கடுமையாகத் தாக்கியுள்ளது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் இரண்டாவதுமுறையாக பா.ஜ.க ஆட்சியமைத்ததிலிருந்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் மீதான கும்பல் தாக்குதல் அதிகரித்துள்ளது. மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இஸ்லாமிய இளைஞர்களை, ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி தாக்கிய சம்பங்கள் நடந்தன.

அதில், உச்சகட்டமாக ஜார்கண்ட் மாநிலத்தில் 22 வயதான தப்ரீஸ் அன்சாரி என்ற இஸ்லாமிய இளைஞரை, மரத்தில் கட்டி சுமார் 8 மணி நேரம் இரக்கமின்றி கட்டையால் அடித்துள்ளனர். அதில், அந்த இளைஞர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.


இந்தநிலையில், மஹாராஷ்டிராவில் மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்திலுள்ள காவல்நிலையத்தில் இம்ரான் இஸ்மாயில் படேல் என்ற புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ‘பெகும்புரா பகுதியில் நான், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது, என்ன வழிமறித்த 10 பேர், ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி கடுமையாகத் தாக்கினர். சத்தம் கேட்டு, அங்கே வந்த கணேஷ் என்பவர் என்னைக் காப்பாற்றினர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த காவல் ஆய்வாளர் மதுகர் சாவந்த், ‘இதுதொடர்பான விசாரணை நடைபெற்றுவருகிறது. சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது, இருதரப்பு இடையே கலவரத்தைத் தூண்டுதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

Also see:

Loading...

First published: July 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...