உ.பியில் விஷம் குடிக்க மறுத்தவர் அடித்துக் கொலை - காவல்துறை விசாரணை!

மாதிரி படம்

நிலைமை மிகவும் மோசமடைந்ததால் மருத்துவர்கள் லக்னோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

  • Share this:
உத்தரப்பிரதேசத்தில் விஷம் குடிக்க மறுத்தவரை அக்கம்பக்கத்தினர் அடித்துக் கொலை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் வசித்து வந்த 35 வயதான ராம் பாரத் ஸ்ரீவஸ்தவாவுக்கு அக்கம் பக்கத்தினருடன் சுமூகமான உறவு இல்லை எனக் கூறப்படுகிறது. அவ்வபோது அவருடன் சண்டையில் ஈடுபட்ட அக்கம்பக்கத்தினர், வியாழக்கிழமை விஷத்தைக் கொடுத்து குடிக்குமாறு துன்புறுத்தியுள்ளனர். மறுத்த அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஸ்ரீவஸ்தவா, அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். நிலைமை மிகவும் மோசமடைந்ததால் மருத்துவர்கள் லக்னோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆம்புலன்சில் அங்கு அழைத்துச் செல்லும்போது வழியிலேயே ஸ்ரீவஸ்தவா உயிரிழந்துள்ளார். இதுகுறித்து பேசிய ஸ்ரீவஸ்தவாவின் சகோதரர் சிவ் பாரத், "அக்கம் பக்கத்தினருக்கும் என் சகோதரருக்கும் எப்போது மோதல் போக்கு நீடித்து வந்தது. அவர்கள் வேண்டும் என்றே வம்புக்கு இழுத்து அவருடன் மோதலில் ஈடுபட்டனர். சம்பவத்தன்று, என் சகோதரரை அழைத்து விஷம் ஒன்றை கொடுத்து குடிக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். அவர் மறுத்ததால் கும்பலாக சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர், இதில் என் சகோதரருக்கு படுகாயம் ஏற்பட்டு நிலைமை மோசமானது. நாங்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்றோம். அங்கு ஸ்ரீவஸ்தவாவின் நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் லக்னோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறிவிட்டனர். அவசர ஊர்தியில் லக்னோவுக்கு அழைத்துச் செல்லும்போது வழியேலே அவர் உயிரிழந்து விட்டார்" என கண்ணீர் மல்க கூறினார்.

இது குறித்து காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல்துறை அதிகாரி ஷ்யாம் சுந்தர் பேசும்போது, ஸ்ரீவஸ்தவாவைக் அடித்துக் கொலை செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். குற்றவாளிகள் தற்போது தலைமறைவாகியிருப்பதால், அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என கூறினார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட 35 வயது நபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். ஆனால், மகனின் இறப்பு குறித்து அவரின் தந்தை சந்தேகம் எழுப்பியுள்ளார். மன நிலை பாதிக்கப்பட்டிருந்தாலும் அவரது கையில் துப்பாக்கி கிடைத்து எப்படி? என வினவியுள்ள தந்தை, யாரேனும் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். காவல்துறையினரும் இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Also read... குதிரையில் வந்தால் கொன்று விடுவதாக மிரட்டல்: உ.பி.யில் தன் திருமணத்துக்குப் போலீஸ் பாதுகாப்பு கேட்கும் தலித்

மேலும், ஜிஜேந்திர பாண்டே தற்கொலை செய்துகொண்ட இடத்தில் துப்பாக்கியைக் கைப்பற்றியுள்ள காவல்துறையினர், அதில் பதிவாகியிருக்கும் கைரேகையை கண்டுபிடிக்க உள்ளனர். இதனடிப்படையில், அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறுயாரேனும் கொலை செய்துவிட்டு நாடகமாடுகிறார்களா? என விசாரணையை முடுக்கிவிடப்படும் என காவல்துறையினர் தெரிவிதுள்ளனர். ஜிஜேந்திர சிங் மன நிலை பாதிக்கப்பட்டவர் என்பதாலும், அவரின் தந்தை சந்தகேம் எழுப்பியிருப்பதாலும் கொலைக்கான வாய்ப்பு உள்ளதா? எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: