தெரு நாய்களுக்கு உணவு கொடுத்து வளர்த்தவருக்கு அடி உதை: உணவு இல்லாமல் வாடிய நாய்கள்

மாதிரிப்படம்.

தெருவில் நாய்கள் தொல்லை பெரும் பிரச்சனையாகி வருகிறது, லைசன்ஸ் எதுவும் பெறாமல் தெரு நாய்களை சிலர் பராமரிப்பது இந்தியா முழுதும் பெரும் தொல்லையாகி வருகிறது, அந்த நாய்கள், பராமரிப்பவருக்கு நன்றி விசுவாசமாய் அதே தெருவில் விளையாடும் மற்ற வீட்டுக் குழந்தைகளை கடித்து விடும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகிறது.

  • Share this:
மேற்கு வங்க மாநிலம் சோனாப்பூர் பகுதியில் தெருநாய்களுக்கு உணவு அளித்து செல்லமாக பராமரித்து வந்த நபரை அண்டை வீட்டார்கள் அடித்து உதைத்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து அவர் வளர்த்த தெரு நாய்கள் உணவின்றி வாடியதையடுத்து இன்னொரு நபர் அந்த நாய்களுக்கு உணவு அளித்து பராமரித்துள்ளார்.

தெருவில் நாய்கள் தொல்லை பெரும் பிரச்சனையாகி வருகிறது, லைசன்ஸ் எதுவும் பெறாமல் தெரு நாய்களை சிலர் பராமரிப்பது இந்தியா முழுதும் பெரும் தொல்லையாகி வருகிறது, அந்த நாய்கள், பராமரிப்பவருக்கு நன்றி விசுவாசமாய் அதே தெருவில் விளையாடும் மற்ற வீட்டுக் குழந்தைகளை கடித்து விடும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகிறது.

பீட்டா போன்ற அமைப்புகளினால் நாய்களை பிடித்துச் செல்வதையும் சம்பந்தப்பட்ட முனிசிபாலிட்டிகள் நிறுத்தியிருக்கின்றன. இதனால் தெருவில், சந்துகளில் பெரிய பிரச்னைகள் கிளம்பி வருகின்றன. இதனால் ஆத்திரமடைந்த சிலர் நாய்களை அடித்துக் கொல்வதும் அவர்கள் மீது வழக்குகளும் போலீஸ் புகார்களும் தொடர்ந்து வருகின்றன.

இந்த உண்மையான பிரச்னைகளுக்கு எந்த அரசியல் கட்சிகளும் தீர்வு காண்பதாகத் தெரியவில்லை.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் சோனாப்பூர் பகுதியில் மோண்டால் (53) என்ற நபர் தெரு நாய்களுக்கு உணவு சமைத்து பரிமாறி பராமரித்து வந்துள்ளார். ஆனால் அந்த நாய்கள் தெருவில் மற்றவர்களுக்கு பெரிய இடையூறாக இருந்து வந்துள்ளது, குழந்தைகளைத் துரத்துவது போன்ற அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன.

மோண்டாலிடம் அக்கம்பக்கத்து வீட்டினர் பேசியுள்ளனர், அவர் சமாதானம் செய்துள்ளார், ஆனால் ஆத்திரத்தில் மக்கள் அவரை அடித்து கை காலை உடைத்து விட்டனர். இதனால் மோண்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து அவரால் பராமரிக்கப்பட்ட நாய்கள் உணவின்றி வாடியதாகவும் அதனால் மீனாக்‌ஷி என்ற விலங்கு நல உரிமையாளர் மீனாக்‌ஷி பாண்டே நாய்களுக்கு உணவு அளித்து பராமரித்து வந்துள்ளார்.

மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த மோண்டால் தன்னைத் தாக்கிய நபர்கள் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார்.

மோண்டால் இது தொடர்பாகக் கூறும்போது, தான் அடி வாங்குவது முதல்முறையல்ல ஒன்றரை ஆண்டுகளாக இதற்காக அடிவாங்குவதாக ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

இவர் பத்தவ்லி என்ற இடத்தில் முன்னதாக குடியிருந்த போதும் அண்டை வீட்டார் தெருநாய்களை வளர்ப்பது குறித்து புகார் அளித்துள்ளனர். ஆனால் அங்கு இவர் பயந்து போய் இடத்தைக் காலி செய்து விட்டு வந்து விட்டார்.

ஆனால் இந்தியா முழுதும் இந்த நாய்களினால் குழந்தைகள் கடிபட்டு இறப்பது அதிகரித்து வருகிறது. இதை எந்த அரசும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது, சக மனிதர்கள் குழந்தைகள் மேல் அக்கறை இல்லாத மோண்டால் போன்றவர்கள் பெருத்து வருகின்றனர். இதற்குத் தீர்வுதான் என்ன என்று அந்தப் பகுதி மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Published by:Muthukumar
First published: