தந்தையே மைனர் வயது மகளை கொடூரமாக பலாத்காரம் செய்து வந்த சம்பவம் ஆசிரியர் மூலமாக அம்பலமாகி இருக்கிறது.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தனது பள்ளி ஆசிரியையிடம், தந்தையால் தனக்கு நேர்ந்த அவலங்களை பகிர்ந்துள்ளார். 42 வயதாகும் தனது தந்தை பல மாதங்களாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்து வருவதாகவும், சமீப காலமாக அவரின் தொந்தரவு அதிகரிக்கவே, உடல் வேதனையையும், மனவேதனையையும் தாங்கிக் கொள்ள முடியாததால் இதனை உங்களிடம் தெரிவிப்பதாகவும் 15 வயது சிறுமி, தனது பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்திருக்கிறார்,
இதனால் அதிர்ந்து போன அந்த ஆசிரியர் சிறுமியின் தந்தையை பள்ளிக்கு வரவழைத்து விசாரித்திருக்கிறார். அப்போது மகளையே பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்டதுடன், தனது செயலுக்காகவும் மன்னிப்பு கோரியுள்ளார். இருப்பினும் இது தொடர்பாக ஆசிரியர், சிறுமியுடன் போலீஸ் நிலையம் சென்று அவரின் தந்தை மீது புகார் அளித்தார். இதன் பேரில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
Also read: காங்கிரஸ் கட்சியில் சேராதது ஏன் - பிரசாந்த் கிஷோர் விளக்கம்
இரண்டு வருடங்களுக்கு முன்னர் அந்த நபருக்கு (சிறுமியின் தந்தை) உடல்நலக் கோளாறு ஏற்பட்டு சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்தன. அவருடைய மனைவி தனது சிறுநீரகத்தில் ஒன்றை தானமாக அளித்துள்ளார். 5 மாதங்களுக்கு முன்னர் அவரின் மனைவிக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து மனைவி தனது தாயார் வீட்டுக்கு சென்று அங்கிருந்தபடி சிகிச்சை பெற்று வருகிறார்.
சிறுமி தனது தந்தையை கவனித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் சிறுமி மொபைல் போனில் அதிக நேரம் செலவிட்டதால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். மேலும் சில மாதங்களாகவே இந்த கொடுமையை அந்த சிறுமி அனுபவித்து வந்திருக்கிறார்.
Also read: பாஜகவின் மிகப்பெரிய பலம் - ரகசியத்தை உடைத்த பிரசாந்த் கிஷோர்
மகளை பாலியல் வன்புணர்வு செய்த தந்தை பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.