உத்தர பிரதேசத்தில் பசு மாட்டை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேசம் லக்னோவில் கடந்த ஏப்.23ம் தேதி நள்ளிரவில் வழக்கத்திற்கு மாறாக மாட்டின் சத்தம் கேட்கவே, பக்கத்து வீட்டில் உள்ள மாட்டினை சென்று பார்த்துள்ளார். அப்போது, பசுமாட்டுடன் ஒருவர் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்வதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, அவர் கூச்சலிடவே, அங்கிருந்து அந்த நபர் தப்பியோடியுள்ளார்.
தொடர்ந்து, தனது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது அந்த நபர் பக்கத்து வீட்டுக்காரர் தான் என்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, மாட்டின் உரிமையாளரிடம் நடந்த சம்பவத்தை அவர் ஆதாரத்துடன் எடுத்து கூறியுள்ளார்.
செவிலியர் கையிலிருந்து தவறி விழுந்த பிறந்த குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த மாட்டின் உரிமையாளர் ஜிதேந்திர யாதவ், தனது மாட்டுடன் பக்கத்து வீட்டில் விசிக்கும் ஒருவர் உடலுறவு கொள்வது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தால் கடும் ஆத்திரமடைந்த உள்ளூர்வாசிகள், குற்றம்சாட்டப்பட்ட நபரை தீவிரமாக வலை வீசி தேடி பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
முன்னதாக, சமீபத்தில் கேரளாவில் சினை ஆட்டை 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, இதுபோல் கால்நடைகளுடன் மனிதர்கள் இயற்கைக்கு மாறாக உடலுறவு கொள்ளும் சம்பவம் அதிகரித்து காணப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.