ஹோம் /நியூஸ் /இந்தியா /

அரை நிர்வாணம்.. காதலியை 5 துண்டாக வெட்டிய கொடூர காதலன்.. சுட்டுப்பிடித்த போலீஸ்!

அரை நிர்வாணம்.. காதலியை 5 துண்டாக வெட்டிய கொடூர காதலன்.. சுட்டுப்பிடித்த போலீஸ்!

கொலை செய்யப்பட்ட பெண்

கொலை செய்யப்பட்ட பெண்

உத்தரப்பிரதேசத்தில் தன்னை காதலிக்க மறுத்த பெண்ணை ஆறு துண்டுகளாக வெட்டிப் படுகொலை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Uttar Pradesh, India

  உத்தரப்பிரதேசத்தில் தன்னை காதலிக்க மறுத்த பெண்ணை ஆறு துண்டுகளாக வெட்டிப் படுகொலை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  உத்தரப்பிரதேசம் மாநிலம் அசம்கார் மாவட்டம் பாஸ்ச்மி கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றுக்குள் இருந்து துர்நாற்றம் வீசவே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  காவல் துறையினர் அங்கு சென்ற பார்தத போது, கிணற்றுக்குள் அரை நிர்வாணமாக துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஒரு பெண்ணின் சடலம் கிடந்துள்ளது. ஆனால் உடலில் தலை இல்லை. இதையடுத்து அந்த சடலத்தைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி்னர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதான ஆராதனா என்பது தெரியவந்தது. கொலை சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.

  அதே பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ் யாதவ் என்பவர் ஆராதனாவை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் ஆராதனாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்து பிரினிஸ் யாதவ் ஆராதனாவை கொல செய்ய திட்டமிட்டுள்ளார்.  ஏற்கனவே தனக்கு இருந்த பழக்கத்தை சாதமாக்கிக் கொண்டு கடந்த 15 ஆம் தேதி ஆராதனாவை பிரின்ஸ் கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அருகில் இருந்த கரும்பு வயலுக்கு ஆராதனாவை அழைத்துச் சென்று தனது உறிவினரான சர்வேஷ் என்வரின் உதவியுடன் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார்.

  ஒரு தலை காதலால் விபரீதம்.. கேரள இளம்பெண் மீது கொலைவெறி தாக்குதல் - சென்னையில் பயங்கரம்

  பின் உடலை ஆறு துண்டுகளாக வெட்டி கூறு போட்டு அருகில் இருந்த கிணற்றுக்குள் வீசி விட்டு தலையை சற்று தள்ளி இருந்த குளம் ஒன்றில் வீசிவிட்டு தப்பியுள்ளனர். கொலையாளி பிரின்ஸ் என்பதை அறிந்தவுடன் அவரை போலீசார் கைது செய்து சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆராதனாவின் தலை வீசப்பட்ட இடத்திற்கு அழைத்தச் சென்ற போது பிரின்ஸ் யாதவ் தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து போலீசாரை சுட்டுவிட்டு தப்ப முயன்றுள்ளார். ஆனால் போலீசார் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டு பிரின்ஸ் யாதவை பிடித்துள்ளனர்.

  போலீசார் சுட்டதில் கொலையாளிக்கு குண்டடி பட்டுள்ளதாக அசம்கார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அனுராக் ஆர்யா தெரிவித்துள்ளார். ஆராதனாவின் தலை மற்றும் துண்டிக்கப்பட்ட உடல் பாகங்களை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  பிரின்ஸ் யாதவிடம் இருந்து ஒரு நாட்டுத்துப்பாக்கி மற்றும் வெட்டிக்கொலை செய்ய பயன்படுத்தி ஆயுதம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கொலைக்கு உடந்தையாக இருந்த உறவினர் சர்வேஷ் மற்றம் குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை அசம்கார் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

  'படித்த பெண்கள் லிவ் இன் உறவில் இருக்கக் கூடாது..' - டெல்லி கொலை குறித்து மத்திய அமைச்சர் கருத்தால் சர்ச்சை!

  டெல்லியில் தன் காதலியை கழுத்தை நெறித்துக்கொலை செய்து விட்டு உடலை 35 துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜூக்குள் ஒருவர் மறைத்து வைத்திருந்த சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் உத்தரப்பிரதேசத்தில் அதே போன்ற  சம்பவம் நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர்: ரொசாரியோ ராய்

  Published by:Srilekha A
  First published:

  Tags: Crime News, Uttar pradesh