திருமணத்தை நிறுத்து என்னுடன் பழகு.. இன்ஸ்டாகிராமில் இளம்பெண்ணுக்கு தொல்லை- விசாரிக்கும் சைபர் க்ரைம்

இன்ஸ்டாகிராம்

10க்கும் மேற்பட்ட அக்கவுண்ட்களில் இருந்து அந்த பெண்ணுக்கு மெசேஜ் வந்த வண்ணம் இருந்துள்ளது.

 • Share this:
  குஜராத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் செவிலியருக்கு தொல்லை கொடுத்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

  குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். இவர் பொழுதுபோக்காக இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் மார்ச் 21-ம் தேதி அவருடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்டுக்கு ஒரு மேசேஜ் வந்துள்ளது.

  அந்தப்பெண்ணுக்கு அறிமுக இல்லாத நபரிடம் இருந்து வந்த மெசேஜ் அது. இந்த பெண்ணை விரும்புவதை போன்று மெசேஜ் வந்துள்ளது. தனது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது இதுபோன்ற மெசேஜ்களை அனுப்பி தொந்தரவு செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். தொடரந்து அந்த நபரிடம் இருந்து மெசேஜ் வந்ததையடுத்து அந்த அக்கவுண்டை ப்ளாக் செய்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில் புதிதாக வேறொரு அக்கவுண்டில் இருந்து அதேநபர் மெசேஜ் செய்துள்ளார். நிச்சயிக்கப்பட்ட நபருடனான திருமணத்தை நிறுத்துவிடு என்னுடன் பழுகு என தொடர்ந்து மெசேஜ் வந்துள்ளது. இதனையடுத்து அந்த அக்கவுண்டையும் ப்ளாக் செய்துள்ளார். ஆனால் அந்த நபரின் தொந்தரவு தாங்கமுடியவில்லை. தொடர்ந்து பல்வேறு அக்கவுண்ட்களில் மெசேஜ் வந்த வண்ணம் இருந்துள்ளது. தன்னுடன் டேட்டிங் செய்யுமாறு தொடர்ந்து மெசேஜ்கள் குவிந்த வண்ணம் இருந்துள்ளது.

  Also Read: பணம் கேட்டு கணவன் சித்ரவதை..  தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட இளம்பெண் - ஆர்டிஓ விசாரணை

  இதனை இப்படியேவிட்டால் பின்னால் தனக்கு பிரச்னை ஏற்படும் என்பதை உணர்ந்த அந்தப்பெண் காவல்துறையின் உதவியை நாடியுள்ளார். இன்ஸ்டாகிராமில் வந்த மெசேஜ் குறித்து சைபர் க்ரைமில் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: