14 வருடங்களுக்கு முன்பு தொலைந்துபோன பயணியின் கோல்டு செயினை இப்போது மீட்டு தந்த ரயில்வே காவல் துறை...

காணாமல் போன கோல்ட் செயின்

மும்பையிலோ பலருக்கு அரசு ரயில்வே காவல்துறையானது (Government Railway Police (GRP)) திருடப்பட்ட லேப்டாப்கள், போன்கள் மற்றும் பணத்தை உரியவர்களிடம் திருப்பி அளித்து வருகின்றது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ரயிலில் பயணம் செய்யும் போது பல பயணிகள் தங்கள் உடமைகள், மொபைல் போன்கள், லேப்டாப்கள் மற்றும் பிற பொருட்களை திருடர்களிடமோ பிக்பாக்கெட் அடிப்பவர்களிடமோ இழந்துவிடுவது சோகமான உண்மைதான். திருடுபோன பொருட்களுக்கு உரிய புகார்கள் இருந்தபோதிலும், இழந்த அல்லது திருடப்பட்ட பொருட்களில் பெரும்பாலானவை ஒருபோதும் கிடைப்பதில்லை.

ஆனால் மும்பையிலோ பலருக்கு அரசு ரயில்வே காவல்துறையானது (Government Railway Police (GRP)) திருடப்பட்ட லேப்டாப்கள், போன்கள் மற்றும் பணத்தை உரியவர்களிடம் திருப்பி அளித்து வருகின்றது. அந்த வகையில் ரூ .14 லட்சம் மதிப்புள்ள பணத்தை திங்களன்று அதன் உரிமையாளருக்கு திருப்பி அளித்தது. சர்வதேச மகளிர் தின நிகழ்வில் இந்த பணம் அதன் உரிமையாளரிடம் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மேலும் 34 பயணிகள் தங்களது திருடப்பட்ட பொருட்களை GRPயிடமிருந்து திரும்பப் பெற்றனர்.

தங்கள் பொருட்களை திரும்ப பெற்றவர்களில், முன்னாள் தொழிலதிபர் சுரேஷ் சவலியாவும் இருந்தார், அவர் தனது 22 கிராம் கோல்டு செயினை 2007 ஆம் ஆண்டில் தனது இரயில் பயணத்தின்போது தனது கைப்பையுடன் இழந்துவிட்டார். அதிர்ஷ்டவசமாக 14 ஆண்டுகளுக்குப் பிறகு திருடுபோன செயினை, சர்வதேச பெண்கள் தின நிகழ்வில் ரயில்வே போலீசார் அவரிடம் ஒப்படைத்தனர்.

மற்றொரு தொழிலதிபரான ஸ்ரீபால் ஜெயினின், போன் திருடப்பட்டது. சவலியாவைப் போலன்றி, இவரது போன் இரண்டு நாட்களுக்குள் கண்காணிக்கப்பட்டு மீட்கப்பட்டது. இதுகுறித்து பேசிய அவர், மும்பையின் தானே நிலையத்திலிருந்து தான் ஒரு ரயிலில் ஏறினேன், பின்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (சிஎஸ்எம்டி) லோக்கல் ரயிலில் ஏறிக்கொண்டிருந்தபோது, எனது பாக்கெட்டிலிருந்து போன் எடுக்கப்பட்டதைக் நான் கண்டேன் என்று ஜெயின் கூறினார். போனில் தனது தரவு மற்றும் வேலேட்கள் குறித்து கவலை கொண்ட அவர், புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு விரைந்தார்.

Also read... குறிப்பிட்ட வாகனங்களுக்கு ரூ. 70,000 வரை தள்ளுபடியை அறிவித்துள்ள டாடா மோட்டார்ஸ்!

நிலையத்தை அடைந்ததும், காவல் துறையினர் தன்னிடம் கண்ணியமாக நடந்து கொண்டதாகவும், சி.சி.டி.வி காட்சிகளைக் காண அவர்கள் என்னை அழைத்துச் சென்றதாகவும் ஜெயின் கூறினார். அவர்கள் எனது புகாரை பதிவு செய்தனர். நான் ஆச்சரியபடும்படி, இந்த பிப்ரவரி முதல் வாரத்திலேயே எனது போன் எனக்கு கிடைத்து விட்டது என்று அவர் சந்தோசத்துடன் கூறினார். இதைப்போலவே, மற்ற 34 பயணிகளுக்கும், அவர்களது தொலைந்த பொருள் மீண்டும் கிடைத்ததில் அவர்கள் ஆனந்த கடலில் மூழ்கினர்.

பொதுவாக நாம் ரயிலிலோ அல்லது பேருந்திலோ பயணம் செய்யும்போது பொருட்கள் தொலைந்தால் அவை மீண்டும் கிடைப்பது அத்தி பூத்தது போல என்பார்கள். ஆனால் எங்கோ ஒருவருக்கோ இருவருக்கோ அதிர்ஷ்டவசமாக தொலைந்த பொருள் மீண்டும் கிடைப்பது வழக்கம். அதுவும் விலை மதிப்பு மிகவும் குறைவான பொருட்கள் கிடைப்பது வழக்கம். ஆனால் மேற்கண்ட சம்பவம் பலரையும் ஆச்சரியத்தின் உச்சத்துக்கே கொண்டுசென்றுள்ளது என்றால் அது மிகையல்ல.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: