Home /News /national /

அழகாக இல்லை... கர்ப்பிணி மனைவியை வாயில் ஆசிட் ஊற்றி கொலை செய்த கணவன்

அழகாக இல்லை... கர்ப்பிணி மனைவியை வாயில் ஆசிட் ஊற்றி கொலை செய்த கணவன்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Pregnant Wife Killed: அழகாக இல்லை எனக் ஊறி மனைவியை டய்லெட் சுத்தம் செய்யும் திரவத்தை குடிக்க வைத்து கொலை செய்து தப்பிச் சென்ற கனவரை தெலங்கானா காவல்துறை தேடி வருகிறது.

    அழகாக இல்லை என்று கர்ப்பிணி மனைவி வாயில் ஆசிட் ஊற்றி கொலை செய்த கணவனின் செயல் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தெலங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டத்தின் ராஜ்பேட் தன்டா பகுதியைச் சேர்ந்தவர் தருண். இவர் கல்யாணி என்ற பெண்ணை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்த சில நாட்களில் இரண்டு பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    . குறிப்பாக, தருண் அவரது மனைவியின் தோற்றத்தை குறை சொல்லி கொடுமைப்படுத்தியுள்ளார். அத்துடன் கல்யாணி தனது தந்தை வீட்டிலிருந்து கூடுதலாக வரதட்சணை கொண்டு வந்த தர வேண்டும் என அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளில் பலமுறை கல்யாணி பிறந்த வீட்டுக்கு சென்று அங்கு இருந்து வந்தார்.

    இந்தநிலையில் கல்யாணியை சமாதானம் செய்து அவருடைய பெற்றோர் கணவன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் கல்யாணி கர்ப்பம் அடைந்தார். 3 மாத கர்ப்பிணியாக கல்யாணி இருந்த நிலையில் கடந்த 27ம் தேதி காலை திடீர் என்று அவர் மரணமடைந்து விட்டார் என்று தருண் கூறினான்.

    மேலும் படிக்க: வேறு நபருடன் திருமணம்.. மண்டபத்தில் காதலியை சுட்டுக்கொலை செய்த காதலன்.. உபியில் பயங்கரம்


    உறவினர்கள் வந்து பார்த்த போது கல்யாணி விழுந்து கிடந்த இடத்தில் ஆசிட் பாட்டில் இருந்தது. மேலும் அவருடைய வாய் வெந்து போய் இருந்தது. இதனால் கல்யாணி வீட்டில் இருந்த ஆசிட்டை எடுத்து குடித்து இறந்துவிட்டார் என்று தருண் கூறினான்.

    இந்த சம்பவம் தொடர்பாக கல்யாணியின் உறவினர்கள் வரதட்சணை கொடுமை, கொலை பிரிவுகளின் கீழ் காவல்துறையில் புகார் கொடுத்தனர். விசாரணையில்,  ‘ மனைவி அழகாக இல்லை, எனவே அவருடன் குடும்பம் நடத்த நான் தயாராக இல்லை, அவர் எனக்கு வேண்டாம்’ என்று அடிக்கடி கூறி வந்த தருண்,  மனைவி வாயில் ஆசிட்டை பலவந்தமாக ஊற்றி குடிக்க வைத்து கொலை செய்தது தெரியவந்தது.

    மேலும் படிக்க: இந்தியாவில் புதிய மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்த வேண்டாம்.. மத்திய அரசு செக்!


    போலீசார்  கல்யாணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள தருண் மற்றும் அவரது குடும்பத்தினரை தருணை தேடி வருகின்றனர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Crime News, Dowry Cases, Murder, Telangana

    அடுத்த செய்தி