செல்போனுக்கு எதிரான வழக்கு: வித்தியாசமாக டீல் செய்த நீதிபதி.. மிரண்டுபோன வழக்கறிஞர்!

செல்போனுக்கு எதிரான வழக்கு: வித்தியாசமாக டீல் செய்த நீதிபதி.. மிரண்டுபோன வழக்கறிஞர்!
கோப்புப்படம்.
  • News18
  • Last Updated: September 13, 2018, 12:50 PM IST
  • Share this:
செல்போன்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், வழக்குத் தொடுத்தவரையே முதலில் செல்போனை சமர்பிக்க சொல்லி மத்தியப் பிரேதச உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மத்திய பிரேதச மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேந்திர திவான். சமூக சேவகரான இவர், செல்போன்கள் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை தடுப்பதற்காக, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சில வழிமுறைகளைக் கொண்டுவர வேண்டும் என அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதன்மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளை செல்போன்களால் ஏற்படுத்தும் ஆபத்துகளிலிருந்து காக்க வேண்டும் என தெரிவித்துக்கொண்டார்.


இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹேமந்த் குப்தா, ஒரு வித்தியாசமான தீர்ப்பை வழங்கினார்.

திவானுக்காக ஆஜரான வழக்கறிஞரிடம், உங்கள் கட்சிக்காரரை முதலில் அவரது செல்போனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க சொல்லுங்கள் என்று கூறினார்.

செல்போன் பயன்படுத்தும் ஒருவரே செல்போன் பயன்பாட்டுக்கு எதிராக தொடர்ந்துள்ள இந்த வழக்கை விசாரிப்பதா இல்லையா என்பதை பிறகு முடிவு செய்துகொள்வோம் என நீதிபதி தெரிவித்தார்.இதை சற்றும் எதிர்பார்க்காத திவானின் வழக்கறிஞர் இது குறித்து முடிவெடுக்க கால அவகாசம் வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து, செல்போன் பயன்பாட்டை நிறுத்தி, தனது செல்போனை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருப்பது குறித்து முடிவெடுக்க திவானுக்கு 2 வாரங்கள் அவகாசம் அளித்து உத்தரவிட்டார்.
First published: September 13, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading