• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து: 19வது மாடியில் இருந்து தப்பிக்க முயன்றவர் தவறி விழுந்து உயிரிழப்பு!

அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து: 19வது மாடியில் இருந்து தப்பிக்க முயன்றவர் தவறி விழுந்து உயிரிழப்பு!

அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து: 19வது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு!

அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து: 19வது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு!

மும்பை லால்பாக் பகுதியில் உள்ள உயரமான சொகுசு குடியிருப்பின் 19வது மாடியில் ஏற்பட்ட தீவிபத்தில் இருந்து தப்பிக்க பால்கனி வந்த நபர் அங்கிருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

  • Share this:
    தெற்கு மும்பையின் குரே சாலையில் உள்ளது 'ஒன் அவிக்னா பார்க்' என்ற சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு. 61 மாடிகளை கொண்ட இந்த சொகுசு குடியிருப்பின் 19வது மாடியில் இன்று காலை 11.50 மணியளிவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
    இதனை பார்த்த அந்த குடியிருப்பின் செக்யூரிட்டி அருண் திவாரி (30), 19வது மாடிக்கு விரைந்துள்ளார். அப்போது, கொழுந்துவிட்டெறியும் தீயால் தான் சூழப்பட்டதை உணர்ந்தவர், அதிலிருந்து தப்பிக்க பால்கனி மூலம் வெளியேற முயற்சித்துள்ளார்.

    எனினும், பால்கனியில் இருந்து அவரால் வேறு எந்த பக்கமும் செல்ல முடியவில்லை. இதனால், சிறிது நேரம் பால்கனியில் தொங்கியபடியே தவித்து வந்தார். பலமுறை தனது கால்களால் பாதுகாப்பான இடத்தை அடைந்துவிட மாட்டோமா என சுவற்றை படிக்க தவித்து வந்தார். எனினும், தனது பிடியை இழந்து சிறிது நேரத்தில் கீழே விழுந்தார். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தக்கூடியதாக உள்ளது.



    தொடர்ந்து, கீழே விழுந்தவரை மருத்துவமனை அழைத்துச்சென்ற போது, அந்த நபர் வரும் வழியிலே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த தீவிபத்து சம்பவம் குறித்து மும்பை மாநகராட்சி ஆணையர் இக்பால் சாஹல் கூறும்போது, தீவிபத்து ஏற்பட்ட சில மணிநிமிடங்களில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அந்த கட்டிடத்தில் இருந்த மற்ற நபர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தீவிபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    60 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் சுமார் 24 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: