ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஃபுல் அடிச்சும் போதை இல்லை - மதுபான கடை மீது அமைச்சரிடம் மதுப்பிரியர் புகார்

ஃபுல் அடிச்சும் போதை இல்லை - மதுபான கடை மீது அமைச்சரிடம் மதுப்பிரியர் புகார்

புகார் கொடுத்த நபர்

புகார் கொடுத்த நபர்

இரண்டு குவாட்டர் பாட்டில் மது அருந்தியும் தனக்கு போதை ஏறவில்லை என மத்தியப் பிரதேசத்தில் ஒரு நபர் அமைச்சருக்கு புகார் அளித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மதுப்பிரியர் ஒருவர் மதுபானக் கடையில் விற்கப்படும் மதுபானத்தை குடித்தால் கிக் ஏறவில்லை என அமைச்சரிடம் புகார் அளித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியைச் சேர்ந்தவர் லோகேந்திர சத்தியா. இவர், அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டாம் மிஸ்ராவிடம் அளித்த புகார் தான் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

  இவர் தனது புகாரில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஷிர்சாகர் பகுதியில் உள்ள நாட்டு மதுபானக் கடை ஒன்றில் நான்கு குவாட்டர் சரக்கு வாங்கியதாகவும், இதில் இரண்டை தான் குடித்ததாகவும், ஆனால் இரண்டு கால் பாட்டில் மது அருந்திய பின்னரும் தனக்கு போதை ஏறவில்லை. இந்த மதுபானங்கள் போலியா அல்லது கலப்படம் செய்யப்பட்டதா என சந்தேகம் எழுகிறது. எனவே, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

  அத்துடன், குடிகாரர்களுக்கு நீதி கிடைக்கவே நான் இதை செய்கிறார். நான் சம்பாதிக்கிறேன். அந்த பணத்தில் தான் குடிக்கிறேன். ஆனால் பல குடிகாரர்கள் சம்பாத்தியம் இல்லாமலேயே குடிக்கும் சூழலில் உள்ளார்கள். அவர்கள் இவ்வாறு ஏமார்ந்தால் என்னாவது என தனது புகாரில் கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சருக்கு புகார் கடிதம் எழுதியதோடு மட்டுமல்லாது, மற்றொரு புகார் கடிதத்தை சுங்கத் துறைக்கு அனுப்பியுள்ளார். அத்துடன் மீதமிருந்த இரண்டு குவாட்டர் பாட்டிலையும் ஆதாரமாக அதில் இணைத்துள்ளார்.

  இதையும் படிங்க: மேடையில் நிர்மலா சீதாராமன் எதிர்பாராத விதமாக செய்த செயலை பாராட்டும் நெட்டிசன்கள்

  சம்பந்தப்பட்ட மதுக்கடை, அதன் கான்ட்ராக்டர் ஆகியோருக்கு உரிய தண்டனை பெற்றுத்தராமல் விடப்போவதில்லை என உறுதியாக உள்ள அவர் இது தொடர்பாக நுகர்வோர் நீதிமன்றத்தையும் நாடப்போவதாக தெரிவித்துள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Madhya pradesh