• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • "சார் சார்ஜர் இருக்கா...." - விமானி அறைக்குள் நுழைந்த போதை ஆசாமி கைது!

"சார் சார்ஜர் இருக்கா...." - விமானி அறைக்குள் நுழைந்த போதை ஆசாமி கைது!

இண்டிகோ விமானம்

இண்டிகோ விமானம்

  • News18
  • Last Updated :
  • Share this:
    இண்டிகோ விமானத்தில் விமானியின்  கேபினுக்குள் போதையில் தன்னிலை அறியாமல் நுழைந்து சார்ஜர் கேட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.  

    மும்பையில் இருந்து கொல்கத்தாவிற்கு திங்கள் இரவு (செப்.24) 6இ-395 விமானம் புறப்பட ஆயத்தமானது. அப்போது 35 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் தன் இருக்கையிலிருந்து எழுந்து நேராக விமானியின் கேபினுக்குள் சென்றார். அங்கிருந்த விமான ஊழியர்களை அலட்சியம் செய்த அவர் நேராக விமானி கேபினுக்குள் நுழைந்தார்.

    இங்கிருந்த விமானிகளிடம் அவர் ஏதோ கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த விமானிகளின் அறிவுறுத்தலின் பேரில், அந்த நபர் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டு விமான நிலைய காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அப்போது அவர் மது அருந்தி  போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    போலீஸார் அந்த நபரை விசாரணை செய்தனர். அப்போது தன்னுடைய செல்போனுக்கு சார்ஜ் போடவே விமானிகள் அறைக்கு  சென்றதாக போலீஸாரிடம் தெரிவித்தார். இதனால் சற்றே அதிர்ச்சியடைந்த போலீஸார் அவர் மீது வேறு எந்த குற்றமும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்று கூறி அவரை விடுவித்தனர்.

    விமானத்தில் பைலட் அறைக்குள் சென்று இடையூறு செய்த பயணியை இறக்கிவிடப்பட்ட பிறகு விமானம் மும்பைக்கு புறப்பட்டது என இண்டிகோ விமான செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    இதேபோன்று, டெல்லியில் இருந்து பாட்னா சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது கழிவறைக்கு பதிலாக விமானத்தின் நுழைவாயில் கதவை பயணி ஒருவர் திறக்க முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ALSO WATCH...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Saroja
    First published: