காதலியின் கணவரை பார்த்து மிரண்டு, பயத்தில் 5வது மாடியில் இருந்து குதித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே திருமணமான பெண்ணை காதலித்த இளைஞர், அந்த பெண்ணையும் அவரது குழந்தையையும் கணவர் வீட்டில் இருந்து கூட்டிச் சென்று யாருக்கும் தெரியாமல் தனியாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், திடீரென அவர்களின் வீட்டுக்கு பெண்ணின் கணவர் வந்து நின்றதை பார்த்து பயந்த இளைஞர், பதற்றத்தில் 5வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: ‘மண்டேலா’ பட பாணியில் சுவாரஸ்யம்.. ₹ 44 லட்சத்துக்கு ஏலம் போன கிராம தலைவர் பதவி
உத்தரப்பிரதேச மாநிலம் நைனிடால் நகரைச் சேர்ந்த 29 வயதாகும் இளைஞர் மோஹ்சின். இவர் திருமணமான பெண் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். அந்த பெண்ணுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. ஒரு கட்டத்தில் மோஹ்சின் மீதான காதலால், திருமணமான அந்தப் பெண் தனது குழந்தையையும் தூக்கிக் கொண்டு அவருடன் வந்துவிட்டார். காதல் ஜோடியினர் குழந்தையுடன், இனி வேறு எங்காவது சென்று ஒன்றாக வாழலாம் என முடிவெடுத்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு தப்பிச் சென்றனர்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதியும் வில்லங்கமும்.. ஜல்லிக்கட்டு டூ பெங்களூரு விமான நிலையம் வரை
மனைவி காதலருடன் தப்பிய நிலையில் அவரது கணவர் மனைவி, குழந்தையை தேடியவாரே இருந்துள்ளார். இப்படியே இரண்டு ஆண்டுகள் கடந்துவிட, திருமணமான பெண், அவரின் குழந்தை என மோஹ்சின் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் எப்படியோ இவர்களின் இருப்பிடத்தை அறிந்த அப்பெண்ணின் கணவர், மோஹ்சின் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வந்துள்ளார். திடீரென தனது காதலியின் கணவரை பார்த்ததில் பயந்துபோன மோஹ்சின், பால்கனிக்கு சென்று அங்கிருந்து குதித்துள்ளார்.
இதையும் படிங்க: டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க பரிசுத் திட்டம் வழங்க மத்திய அரசு முடிவு!
இதில் படுகாயமடைந்த மோஹ்சின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த திங்களன்று பரிதாபமாக உயிரிழந்தார். மோஹ்சின் சில நாட்களுக்கு முன்னர் தான் அந்த வீட்டுக்கு குடிவந்திருக்கிறார். இதற்கு முன் வேறு ஒரு வீட்டில் காதலி, குழந்தையுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், மோஹ்சினின் காதலி மற்றும் அவரின் கணவரை தேடி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Illegal relationship, Love, Lovers, Toxic Relationship