’ஜெய் ஸ்ரீராம்’ சொல்லச் சொல்லி 12 மணி நேரம் தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!

இந்தச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த அன்சாரியின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், முக்கிய குற்றவாளியான பப்பு மண்டல் உள்ளிட்டவர்கள் மீது கொலை குற்றம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

’ஜெய் ஸ்ரீராம்’ சொல்லச் சொல்லி 12 மணி நேரம் தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!
தப்ரீஸ் அன்சாரி
  • News18
  • Last Updated: June 24, 2019, 7:11 PM IST
  • Share this:
ஜார்கண்ட் மாநிலத்தில் மரத்தில் கட்டி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் இருந்த 22 வயது இளைஞர் தப்ரீஸ் அன்சாரி என்ற இஸ்லாமிய இளைஞர் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக, சிலரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலம் செராய்கீலா கார்ஸவான்(Seraikela Kharsawan)மாவட்டத்திலுள்ள தாட்கிதி கிராமத்தில் ஜுன் 18-ம் தேதி தப்ரீஸ் அன்சாரி என்ற இளைஞரை, திருடர் என்று கூறி அந்த ஊர் மக்கள் மரத்தில் கட்டி வைத்து, சில மணி நேரங்கள் இரக்கமின்றி அடித்துள்ளனர். மேலும், அவரை ஜெய் ஸ்ரீராம், ஜெய் அனுமான் என்று கோஷம் எழுப்பச் சொல்லி மீண்டும் மீண்டும் அடித்துள்ளனர்.

சில மணி நேரங்கள் கழித்து அங்கு வந்த காவல்துறையினர், அடிவாங்கிய தல்ரீஸை கைது செய்துள்ளனர். கமல் மஹாடோ என்பவர், தன்னுடைய வீட்டில் தப்ரீஸ் அன்சாரி உள்ளிட்ட மேலும் இருவர் திருட வந்தனர் என்ற புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தப்ரீஸை கைது செய்தனர். நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டிருந்த தப்ரீஸை உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளார்.


பின்னர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன்னரே, அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த அன்சாரியின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், முக்கியக் குற்றவாளியான பப்பு மண்டல் உள்ளிட்டவர்கள் மீது கொலை குற்றம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து தப்ரீஸின் உறவினர்கள் அழுதுகொண்ட கூறும்போது, ‘திருடி பிடிபட்டவரை, மரத்தில் கட்டிவைத்து ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி சில மணி நேரங்கள் அடித்தது அதிர்ச்சியாக உள்ளது. முஸ்லீமாக பிறந்ததுதான் அவனுடைய தவறு. இல்லையென்றால், அவன் உயிருடன் இருந்திருப்பான்’ என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து தெரிவித்த மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திக், ‘இரு சக்கர வாகனத்தை திருடும்போது பொதுமக்கள் பிடித்து, அவரை அடித்துள்ளனர். அவருடைய வீட்டிலிருந்து பல திருட்டுப் பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தார்.Also see:

First published: June 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading