சமோசா விலையேற்றம் குறித்து கடைக்காரருடன் ஏற்பட்ட தகராறு.. தற்கொலையில் முடிந்த சோகம்

சமோசா விலையேற்றம் குறித்து கடைக்காரருடன் ஏற்பட்ட தகராறு.. தற்கொலையில் முடிந்த சோகம்!!

ஜெய்ஸ்வாலுக்கும் கடைக்காரருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 • Share this:
  சமோசாவை அதிக விலைக்கு விற்பனை செய்த கடைக்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர், மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மத்திய பிரேதம் அனுப்பூர் மாவட்டத்தின் அமர்கண்டக் நகரில், கடந்த 22ம் தேதி ஜெய்ஸ்வால் என்பவர் தனது இரு நண்பர்களுடன் ஒரு கடையில் சமோசா சாப்பிட்டுள்ளார். பின்னர் சமோசாவுக்கான பணத்தை கொடுத்த போது, கடைக்காரர் சமோசா விலை உயர்ந்துவிட்டதாக கூறி 2 சமோசா ரூ.15க்கு பதிலாக ரூ.20 தரும்படி கேட்டுள்ளார்.

  இதையடுத்து, ஜெய்ஸ்வாலுக்கும் கடைக்காரருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில், வாக்குவாதம் முற்றியதை தொடர்ந்து, கடைக்காரர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

  Also read: வெயில் பட காட்சிகளை நினைவுபடுத்தும் நிகழ்வு.. 45 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் இணைந்த நபர்!

  இதையடுத்து, போலீசார் இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 294, 506 மற்றும் 34 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

  முதற்கட்டமாக ஜெய்ஸ்வாலை போலீசார் விசாரித்து அனுப்பியுள்ளனர். இதில் மனமுடைந்த ஜெய்ஸ்வால், பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

  உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, மருத்துவமனை செல்லும் வழியில் குடும்பத்தினர் ஜெய்வாலின் வாக்குமூலத்தை செல்போனில் பதிவு செய்துள்ளனர்.

  Also read: பேருந்து மீது லாரி மோதி விபத்து- சாலையில் தூங்கிக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு

  அதில், சமோசா கடைக்காரர் மற்றும் போலீசாரால் தான் கடுமையாக துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், அதனால் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

  தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதித்தும், பலத்த தீக்காயம் காரணமாக ஜெய்ஸ்வால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
  Published by:Esakki Raja
  First published: