இப்படி ஒரு மரணமா...! சோகத்தில் முடிந்த நாகினி நடனம்

news18
Updated: September 15, 2019, 3:27 PM IST
இப்படி ஒரு மரணமா...! சோகத்தில் முடிந்த நாகினி நடனம்
வீடியோ காட்சிகள்
news18
Updated: September 15, 2019, 3:27 PM IST
விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் நடனமாடிய ஒருவர், திடீரென கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. இந்த வீடியோ அங்கு வைரலாக பரவி வருகிறது.

விநாயகர் சதுர்த்தி பண்டியையை ஒட்டி நாடு முழுவதும் விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டு, பின்னர் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன. இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் நடனமாடிய ஒருவர், ஆடும்போதே திடீரென மரணமடைந்த சம்பவம் நடந்துள்ளது.

மத்தியப்பிரதேசத்தின் சீயோனி என்ற மாவட்டத்தில் கடந்த வெள்ளியன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. தாகூர் என்ற இளைஞர் மேடையில் ஏறி, நாகினி நடனம் ஆடிக்கொண்டிருந்த நிலையில், திடீரென கீழே விழ அப்படியே அவர் மரணமடைந்துள்ளார்.


இந்த வீடியோ அங்கு வைரலாக பரவி வருகின்றது.தாகூரின் உயிரிழப்பு நிகழ்ச்சியில் கொண்டாட்டத்தில் இருந்தவர்களை சோகமாக்கியுள்ளது.First published: September 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...