Home /News /national /

கறி குழம்பு சமைத்து தராத மனைவி.. 100க்கு போன் போட்டு புகார் சொன்ன கணவன் - அடுத்து நடந்தது சம்பவம்..

கறி குழம்பு சமைத்து தராத மனைவி.. 100க்கு போன் போட்டு புகார் சொன்ன கணவன் - அடுத்து நடந்தது சம்பவம்..

முதலில், நவீனின் பேச்சை கேட்ட காவலர்கள் யாரோ பிராங்க் செய்கிறார் என்று பெரிதாக அதனை எடுத்துக்கொள்ளாமல் அழைப்பை துண்டித்துள்ளனர்.

முதலில், நவீனின் பேச்சை கேட்ட காவலர்கள் யாரோ பிராங்க் செய்கிறார் என்று பெரிதாக அதனை எடுத்துக்கொள்ளாமல் அழைப்பை துண்டித்துள்ளனர்.

முதலில், நவீனின் பேச்சை கேட்ட காவலர்கள் யாரோ பிராங்க் செய்கிறார் என்று பெரிதாக அதனை எடுத்துக்கொள்ளாமல் அழைப்பை துண்டித்துள்ளனர்.

    தெலுங்கானாவில் கறி குழம்பு சமைத்து தராத மனைவி குறித்து காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு போன் போட்டு கணவன் புகார் செய்துள்ளார். இதனால், கடுப்பான போலீசார் புகார் தெரிவித்த நபர் மீது வழக்கு பதிவு செய்து அவரை எச்சரித்துள்ளனர்.

    தெலுங்கானாவின் கனகல் மண்டலத்தில் உள்ள சேரலா கௌராரம் கிராமத்தை சேர்ந்தவர் நவீன். கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு ஆட்டிறைச்சியுடன் வீடு திரும்பிய நவீன், அதனை கறி குழம்பாக சமைத்து கொடுக்கும்படி மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால், குடிபோதையில் வந்த நவீன் மீது அதிருப்தியில் இருந்த அவரது மனைவி, அதனை சமைத்து கொடுக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து, போதையில் இருந்த நவீன் தனக்கு கறி குழம்பு வைத்து கொடுக்காத மனைவி மீது புகார் செய்ய நினைத்துள்ளார். அதற்காக, தனது செல்போனில் 100க்கு டயல் செய்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்த நவீன், கறி குழம்பு சமைக்காத மனைவி குறித்து புகார் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டம் உலகிற்கே வழிகாட்டுகிறது.. தமிழிசை சௌந்தரராஜன்

    முதலில், நவீனின் பேச்சை கேட்ட காவலர்கள் யாரோ பிராங்க் செய்கிறார் என்று பெரிதாக அதனை எடுத்துக்கொள்ளாமல் அழைப்பை துண்டித்துள்ளனர். ஆனால், போதையில் இருந்த நவீன் விடாமல் கட்டுப்பாட்டு அறைக்கு 6 முறை அழைப்பு விடுத்துள்ளார்.

    இதனால், நவீனுக்கு பாடம் புகட்ட நினைத்த காவல் துறையினர், அவரது செல்போன் எண்ணை ஆய்வு செய்து அவர் இருப்பிடத்தை அறிந்து நவீன் வீட்டிற்கு நேரில் சென்றனர். ஆனால் அங்கு நவீன் முற்றிலும் குடிபோதையில் இருப்பதை கண்ட போலீசார், தற்சமயம் அவரை வீட்டிலே விட்டு செல்லலாம் என்று எண்ணி அங்கிருந்து திரும்பினர்.

    நடந்த சம்பவம் குறித்து நவீனுக்கு எதுவும் நினைவு இருந்திருக்குமா என்பது தெரியவில்லை. எனினும், இரவில் கருணை காட்டி விட்டுச் சென்ற போலீசார், சனிக்கிழமை காலையில் விரைந்து வந்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு அவர் மீது பிரிவு 290 மற்றும் 510 இன் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    இதுதொடர்பாக கனகல் உதவி காவல் ஆய்வாளர் நாகேஷ் கூறும்போது, பொது மக்களுக்கு அவசர காலங்களில் உதவுவதற்காக அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறை எண்ணான 100-ஐ இது போன்று யாரும் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தார்.

    100க்கு போன் போட்டு போலீசாரின் நேரத்தை வீணடித்த நவீன் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Drunkard, Telangana

    அடுத்த செய்தி