கர்நாடகா லாக்டவுன்: தன் மகனுக்காக உயிர்காக்கும் மருந்துகளை வாங்க 300 கிமீ சைக்கிளில் சென்ற நபர்

கர்நாடகா லாக்டவுன்

பல மாநிலங்களில் கொரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த லாக்டவுன் நடைமுறையில் இருந்து வருவதால், உயிர்காக்கும் மருந்துகளை வாங்க முடியாமல் பலர் அல்லல் பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 • Share this:
  பல மாநிலங்களில் கொரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த லாக்டவுன் நடைமுறையில் இருந்து வருவதால், உயிர்காக்கும் மருந்துகளை வாங்க முடியாமல் பலர் அல்லல் பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

  தங்கள் வீட்டில் பாதிக்கப்பட்டவர்களின் உடல் நலம் பேணவும், உயிர்காக்கவும் பலரும் பல இன்னல்களை சந்தித்துப் போராடி தங்கள் உறவினர்கள், குடும்பத்தினரை காப்பாற்றி வருகின்றனர்.

  இப்படிப்பட்ட சம்பவம் ஒன்றில்தான் கர்நாடகத்தில் கட்டுமானத் தொழிலாளி ஒருவர் தன் மகனுக்காக 300 கிமீ சைக்கிளில் பயணித்து உயிர்க்காக்கும் மருந்துகளைப் பெற வேண்டியிருந்தது.

  தந்தையும் மகனும் 300 கிமீ சைக்கிளில் பயணம் செய்துள்ளனர், அதாவது தங்கள் கானிகனகொப்பால் என்ற கிராமத்திலிருந்து பெங்களூருவுக்கு சைக்கிளில் வந்து மருந்து வாங்கிச் சென்றுள்ளனர்.

  Read More: 10 வருடத்துக்கு முன்பு இறந்தவருக்கு கோவிட் தடுப்பூசி போட்டதாக வந்த மெசேஜ் - விசாரணையில் இறங்கிய அதிகாரிகள்

  தொழிலாளியின் மகன் பெங்களூரு தேசிய மனநல மற்றும் நரம்பு அறிவியல் கழகத்தில் 10 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறான். லாக்டவுன் நடைமுறையில் இருப்பதால் மகனை செக்-அப்பிற்கு அழைத்து வர முடியவில்லை. மருந்துகள் வாங்க தந்தையும் மகனும் 2 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவமனைக்கு வந்து செல்வார்கள்.

  இந்நிலையில் மருந்துகளின் அவசரத் தேவைகளைக் கருதி 300 கிமீ சைக்கிளில் அயராது பயணம் செய்துள்ளனர் தந்தையும் மகனும். மே 23ம் தேதி கிராமத்திலிருந்து புறப்பட்டு மே 26ம் தேதி திரும்பியுள்ளனர்.

  Read More: ஜூலை மாத இறுதிக்குள் 25 கோடி கொரோனா தடுப்பூசி கொள்முதல் : மத்திய அரசு திட்டம்

  இந்த மருந்துகளைக் கொடுக்கவில்லை எனில் பையனுக்கு வலிப்பு வந்து விடும் என்று மருத்துவர்கள் எச்சரித்திருப்பதாக தந்தை ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

  இவரது நிலைமையைப் பார்த்து மருத்துவக் கழகத்தின் மருத்துவர்கள் ரூ.1000 தந்து உதவியுள்ளனர்.

  கர்நாடகாவில் ஜூன் 7ம் தேதி வரை லாக் டவுன் அமலில் உள்ளது. லாக்டவுனை நீட்டிப்பது பற்றி கர்நாடக அரசு ஜூன் 5ம் தேதி முடிவெடுக்கும் என்று தெரிகிறது.
  Published by:Muthukumar
  First published: