முகப்பு /செய்தி /இந்தியா / நடத்தையில் சந்தேகம்... மனைவியை கொலை செய்து உடலை பல துண்டுகளாக வெட்டி தண்ணீர் தொட்டியில் வீசிய கொடூர கணவர்!

நடத்தையில் சந்தேகம்... மனைவியை கொலை செய்து உடலை பல துண்டுகளாக வெட்டி தண்ணீர் தொட்டியில் வீசிய கொடூர கணவர்!

உடல் பாகங்களை மறைத்து வைத்திருந்த தண்ணீர் தொட்டி

உடல் பாகங்களை மறைத்து வைத்திருந்த தண்ணீர் தொட்டி

மனைவியை கொலை செய்து பல துண்டுகளாக வெட்டி பாகங்களை தண்ணீர் தொட்டியில் வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chhattisgarh, India

தனது மனைவியின் நடத்தை மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக பெண்ணை கொடூரமாக கொலை செய்து பல துண்டுகளாக வெட்டி தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்திருந்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சமீப காலமாகவே ஷர்த்தா வாக்கர், நிக்கி யாதவ் போன்ற இளம் பெண்களின் பகீர் கொலை சம்பவங்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன. அதேவகையில் பகீர் கொலை சம்பவம் ஒன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள உஸ்லாபூர் பகுதியைச் சேர்ந்தவர் பவன் சிங் தாக்கூர். இவருக்கு சதி சாஹூ என்ற பெண்ணுடன் திருமணமாகியுள்ளது.

இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கணவர் பவன் தாக்கூருக்கு மனைவி சதி சாஹூவின் நடத்தையின் மீது சமீப காலமாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இரு மாதங்களுக்கு முன்னர் இது தொடர்பாக ஏற்பட்ட சண்டையின் போது மனைவி சதியை கணவர் கொடூரமாக கொலை செய்துள்ளார். கொலையை மறைக்கும் விதமாக மனைவியை பல துண்டுகளாக வெட்டி வீட்டு மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் பாகங்களை போட்டு வைத்துள்ளார்.

சம்பவம் நடந்து இரு மாதங்கள் கடந்த நிலையில், நாள் செல்ல பவன் வீட்டு பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. சந்தேகம் அடைந்த அண்டை வீட்டார், காவல்துறையிடம் புகார் அளிக்கவே உண்மை அம்பலமாகியுள்ளது. தொடர்ந்து பவன் தாக்கூர் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: Chattisgarh, Crime News, Murder