Home /News /national /

Video | தவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலை வெட்டிக்கொண்ட பகுஜன் சமாஜ் தொண்டர்!

Video | தவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலை வெட்டிக்கொண்ட பகுஜன் சமாஜ் தொண்டர்!

விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்

விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்

பகுஜன் சமாஜ் வேட்பாளருக்கு பதிலாக, பாஜகவுக்கு ஓட்டுபோட்ட பவன் குமார் என்ற பகுஜன் சமாஜ் தொண்டர், மனவேதனை அடைந்து தனது விரலை வெட்டிக்கொண்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
    மக்களவை தேர்தலில் தவறுதலாக பாஜக வேட்பாளருக்கு வாக்களித்ததால், தனது விரலை பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர் வெட்டிக்கொண்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

    மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளில் நடந்தது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் - மாயாவதி கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர்.

    புலந்த்சஹரில் நேற்று நடந்த வாக்குப்பதிவின் போது, தவறுதலாக பகுஜன் சமாஜ் வேட்பாளருக்கு பதிலாக, பாஜகவுக்கு ஓட்டுபோட்ட பவன் குமார் என்ற பகுஜன் சமாஜ் தொண்டர், மனவேதனை அடைந்து தனது விரலை வெட்டிக்கொண்டுள்ளார்.



    பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் வீடு திரும்பியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





    Published by:Sankar
    First published:

    Tags: Lok Sabha Election 2019, Uttar Pradesh Lok Sabha Elections 2019

    அடுத்த செய்தி