முதல் மனைவியை துரத்திவிட்டு, 3 இளம்பெண்களை ஏமாற்றி காதலித்து திருமணம் செய்த பலே நபர்... தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த மக்கள்

தெலங்கானாவில் முதல் மனைவியை அடித்து துரத்திவிட்டு 3 இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட நபரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒடைப்படைத்தனர்.

முதல் மனைவியை துரத்திவிட்டு, 3 இளம்பெண்களை ஏமாற்றி காதலித்து திருமணம் செய்த பலே நபர்... தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த மக்கள்
கோப்புப் படம்
  • Share this:
தெலங்கானாவில் முதல் மனைவியை அடித்து துரத்திவிட்டு 3 இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட நபரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒடைப்படைத்தனர்.

பெத்தபள்ளி மாவட்டத்தை சேர்ந்த சம்பத் என்பவர், தனது முதல் மனைவியை அடித்து பிறந்த வீட்டிற்கு அனுப்பி உள்ளார். பின்னர் தனியார் வணிக வளாகத்தில் பணிக்கு சென்ற அவர், அங்கு பணிபுரியும் பெண் ஊழியரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

BiggBossTamil : பிக்பாஸ் தமிழ் 4 ஒளிபரப்பு தேதி பற்றி வெளியான அசத்தல் அப்டேட்

இதேபோல் மேலும் 2 பெண்களை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்து வந்த முதல் மனைவியின் உறவினர்கள், சம்பத்தை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின்பேரில் சம்பத்தை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
First published: September 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading