முகப்பு /செய்தி /இந்தியா / ஆணுறுப்பு மீது உருகிய பிளாஸ்டிக்கை ஊற்றி வெறிச்செயல்... போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞருக்கு நேர்ந்த அவலம்..!

ஆணுறுப்பு மீது உருகிய பிளாஸ்டிக்கை ஊற்றி வெறிச்செயல்... போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞருக்கு நேர்ந்த அவலம்..!

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

குஜராத் மாநிலத்தில் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு வந்த ஒரு நபர் அடித்து சித்ரவதை செய்யப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Gujarat, India

குஜராத் மாநிலம் படான் மாவட்டத்தில் ஜியோனா போதை மறுவாழ்வு மையம் உள்ளது. இங்கு மேசானா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹர்திக் சுதார் என்ற  25 வயதான நபர் 6 மாதத்திற்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த மாதம் 17ஆம் தேதி திடீரென உயிரிழந்த நிலையில், சிகிச்சை மையத்தின் நிர்வாகிகள் அவர் இயற்கையான முறையில்  உயிரிழந்துவிட்டதாகக் கூறி உடலை ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து உடல் தகனம் செய்யப்பட்டது.

இருப்பினும் ஹர்திக் மரணம் மீது காவல்துறைக்கு சந்தேகம் எழுந்த நிலையில், அவர்கள் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்த தொடங்கினர். அப்போது தான் அதிர்ச்சிக்குரிய உண்மை அம்பலமானது. சம்பவ நாளான பிப்ரவரி 17இல் பாதிக்கப்பட்ட ஹர்திக் தனது கை மணிக்கட்டை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது மையத்தின் ஊழியர்களுக்கு தெரிய வரவே, அவர்கள் ஹர்திக்கை பிடித்து கைகால்களை கட்டிப்போட்டு கயிற்றில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடித்து தாக்க தொடங்கியுள்ளனர்.

தடியான பிளஸ்டிக் பைப்புகளை வைத்துக்கொண்டு சுமார் இரண்டு மணிநேரம் அடித்து கொடூரமமாக தாக்கியுள்ளனர். பிளாஸ்டிக் பைப்பை காய்ச்சி உருக்கி அதனை ஹர்திக்கின் அந்தரங்க உறுப்புகளில் ஊற்றியுள்ளனர்.  இந்த கோர தாக்குதலில் ஹர்திக் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுபோன்ற செயல்களில் யாராவது ஈடுபட்டால் உங்களுக்கும் அதே நிலைதான் என அவர்கள் மற்ற நோயாளிகளையும் எச்சரித்துள்ளனர். இத்தகைய கொடூரத்தை அரங்கேற்றிய பின் ஹர்திக் இயற்கையாக மரணமடைந்ததாக நாடகமாடி அவர்கள் உடலை அடக்கம் செய்துள்ளனர். ஆதாரங்கள் வெளியானதை தொடர்ந்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரை காவல் துறை செய்து செய்துள்ளார்.  சிகிச்சைக்காக சென்ற நபரை மறுவாழ்வு மையத்தில் வேலை செய்பவர்கள் அடித்தே கொன்ற சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

First published:

Tags: Gujarat, Viral Video