அண்ணி குளிப்பதை ரகசிய வீடியோ எடுத்து மைத்துனர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்நிய நபர்கள் , குடும்ப உறுப்பினர்களால் என நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் குற்றங்களுக்கு பாகுபாடில்லை என்பதை உணர்த்தும் வகையில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த 25 வயது இளம் பெண்ணுக்கு குடும்ப உறுப்பினர் ஒருவராலேயே துயரம் ஏற்பட்டுள்ளது. திருமணமான அப்பெண் தனது கணவருடன் ஒன்றாக வசித்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதத்தில் அந்த இளம் பெண் குளித்துக் கொண்டிருந்ததை யாருக்கும் தெரியாமல் அப்பெண்ணின் மைத்துனர் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர் தனது அண்ணியை அணுகிய 25 வயதாகும் மைத்துனர், நீங்கள் குளிப்பதை வீடியோ எடுத்து வைத்திருக்கிறேன். என்னுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளவேண்டும் இல்லையென்றால் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியிருக்கிறார்.
Also read:
3 லட்சம் மரணங்களுக்கு வாய்ப்பு.. 2,000 எலிகளை கொல்ல உத்தரவு - உலக நாடுகளில் கொரோனா சூழல் இதுதான்!
இதைக் கேட்டு அந்த இளம் பெண் அதிர்ந்த போதிலும், மைத்துனரின் ஆசைக்கும் இணங்க மறுப்பு தெரிவித்திருக்கிறார். ஒரு கட்டத்தில், அந்த நபர் இளம் பெண்ணை கட்டையால் அடித்து தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என வற்புறுத்தி மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.
மானம் பறிபோகுமே என நினைத்து தனக்கு நேர்ந்த இந்த கொடுமையை கணவரிடமும், வெளியே யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தார் அப்பெண். இருப்பினும், தொடர்ந்து அவரை மிரட்டி தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் இந்த வீடியோவை வெளியிட்டு வைரலாக்கி விடுஏன் என மைத்துனரின் மிரட்டல் அதிகரிக்கவே. வேறு வழியில்லாமல் இது குறித்து தனது கணவரிடம் கூறியதுடன், கடந்த ஜனவரி 15ம் தேதியன்று மைத்துனர் மீது Hinjewadi காவல்நிலையத்தில் புகாரும் அளித்தார்,.
Also read:
பாஜகவின் பதிலடி - கடும் அதிர்ச்சியில் அகிலேஷ் யாதவ்...
போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட, பர்பானி மாவட்டத்தைச் சேர்ந்த அந்த நபர் தலைமறைவாகி இருக்கிறார். அவரை தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.