முகப்பு /செய்தி /இந்தியா / மனைவி பிரிந்த ஆத்திரத்தில் மாமியாரின் மூக்கை அறுத்த மருமகன்.. மத்திய பிரதேசத்தில் பரபரப்பு..!

மனைவி பிரிந்த ஆத்திரத்தில் மாமியாரின் மூக்கை அறுத்த மருமகன்.. மத்திய பிரதேசத்தில் பரபரப்பு..!

மூக்கு அறுபட்ட மாமியார்

மூக்கு அறுபட்ட மாமியார்

மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் மாமியாரின் மூக்கை மருமகன் அறுத்த பரபரப்பு சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madhya Pradesh, India

மத்தியப் பிரதேச மாநிலம் மோர்னியா மாவட்டத்தின் சந்தப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரஹ்மத் பகேல், அவரது மனைவி ராம் விலாசி. இந்த தம்பதிக்கு ஷியாம் சுந்தரி என்ற மகள் உள்ளார். தனது மகளை பக்கத்து ஊரில் வசிக்கும் ராஜூ பகேல் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

மகள் ஷியாம் சுந்தரிக்கும் மருமகன் ராஜூவுக்கும் சமீப காலமாக பிணக்கு ஏற்பட்டுள்ளது. ஷியாம் சுந்தரியை ராஜூ தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஷியாம் சுந்தரி போலீசில் புகார் அளித்ததோடு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் மகளை பார்க்க தந்தை ரஹ்மத் மற்றும் தாய் ராம் விலாசி சென்றுள்ளனர். மோதல் தொடர்பாக மகளிடம் பேசிய நிலையில், இனி தன்னால் கணவருடன் சேர்ந்து வாழ முடியாது என ஷியாம் சுந்தரி கூறியுள்ளார்.

இந்த பிரச்னையை தொடர்ந்து ரஹ்மத், ராம் விலாசியுடன் அங்கிருந்து கிளம்பியுள்ளார். அப்போது அவரது மருமகன் ராஜூ தனது 2 உறவினர்களுடன்  சேர்ந்து மாமனார், மாமியாரை இடை மறித்து தகராறு செய்துள்ளார்.  மேலும்,  திடீரென ஆத்திரத்தில் அவரது மாமியார் ஷியாம் சுந்தரியின் மூக்கை அறுத்துவிட்டு தப்பியோடினார்.

இதையும் படிங்க: 3 லட்சம் செலவு செய்து 5 ரூபாய்க்கு விலை போன வெங்காயம்... வேதனையில் ஆடுகளுக்கு உணவாக்கிய விவசாயி..!

இதனையடுத்து, தனது மனைவி ராம் விலாசியை மருத்துவமனையில் சேர்த்துள்ளார் ரஹ்மத். மேலும், இது தொடர்பாக காவல் துறையிடம் புகார் அளித்த நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. தனது மனைவியை மாமியார் தான் தூண்டிவிட்டு பிரச்னை உருவாக்குவதாக கூறி மருமகன் ராஜூ மூக்கை அறுத்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட ராம் விலாசி மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

First published:

Tags: Crime News, Madhya pradesh