மனைவியின் தலையை வெட்டி கையில் எடுத்துக் கொண்டு 3 கி.மீ நடந்தே சென்று காவல்நிலையத்தில் சரணடைந்த கணவர்- உ.பியில் அதிர்ச்சி

உ.பியில் மனைவியின் மீது சந்தேகம் அடைந்த கணவர், மனைவியின் வெட்டிய தலையை கையில் எடுத்துக் கொண்டு, 3 கிலோ மீட்டர் வரை நடந்து காவல் நிலையம் சென்று சரணடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் தலையை வெட்டி கையில் எடுத்துக் கொண்டு 3 கி.மீ நடந்தே சென்று காவல்நிலையத்தில் சரணடைந்த கணவர்- உ.பியில் அதிர்ச்சி
கோப்புப் படம்
  • Share this:
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சின்னர் யாதவ் (வயது40). இவரது மனைவி விமலா (வயது 35). இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சின்னர் யாதவிற்கு தனது மனைவி மீதும், பக்கத்துக்கு வீட்டுக் காரர் ரவி காண்ட் யாதவ் மீதும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரது வீட்டின் அக்கம் பக்கத்தினரும் சின்னர் யாதவின் மனைவி மற்றும் பக்கத்து வீட்டுக் காரருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கூறியுள்ளனர்.

இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை ஏற்கனவே சந்தேகத்தில் இருந்த சின்னர் யாதவ், தனது மனைவி பக்கத்துக்கு வீட்டுக்காரருடன் பேசிக்கொண்டிருப்பதை கண்டுள்ளார்.

ALSP READ |  ஆர்டர் செய்துவாங்கி ஆசையாக வளர்த்த பூனைக்குட்டி புலிக்குட்டியாக மாறியது... தம்பதிகளுக்கு ஷாக்


இதனை கண்ட அவர் ஆத்திரத்தில் அருகில் இருந்த கோடரியை கொண்டு பக்கத்துக்கு வீட்டுக் காரரை தாக்கியுள்ளார். மேலும் மனைவியின் தலையை வெட்டியுள்ளார்.


வெட்டிய தலையை கையில் எடுத்துக் கொண்டு, 3 கிலோ மீட்டர் வரை நடந்து காவல் நிலையம் சென்று சரணடைந்துள்ளார். இதனை கண்ட காவல் துறையினர் அதிர்ச்சியில் உறைந்து சின்னர் யாதவ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
First published: October 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading