மகளின் தலையை துண்டித்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்த தந்தை!

மகளின் தலையை துண்டித்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்த தந்தை!

மகளின் தலையை துண்டித்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்த தந்தை!

கையில் வெட்டப்பட்ட தலையுடன் நடந்தவரை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

  • Share this:
குற்ற நிகழ்வுகள் நிகழ்வதற்கு பெயர் போன உத்தரப்பிரதேசத்தில் மகளின் தலையை துண்டித்து அதனை காவல்நிலையத்திற்கு தந்தை கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள பண்டேடரா கிராமத்தைச் சேர்ந்தவர் சர்வேஷ் குமார், இவருக்கு 17 வயதில் ஒரு மகள் இருந்தார். கடந்த புதன் கிழமை மதியம் தனது மகளின் தலையை துண்டித்த சர்வேஷ், அதனை தன் கையில் எடுத்துக் கொண்டு காவல்நிலையம் நோக்கி நடந்து வந்தார்.

கையில் வெட்டப்பட்ட தலையுடன் நடந்தவரை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனை வீடியோவாக எடுக்கும் ஒரு நபர் அவரிடம் என்ன நடந்தது என கேட்டபோது என் மகளை நான் கொலை செய்து விட்டேன். வேறு ஒரு ஆணுடன் அவர் தொடர்பில் இருந்தார் அது எனக்கு பிடிக்கவில்லை அதனால் கொலை செய்தேன் என கூறுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதன் பின்னர் சர்வேஷ் குமார் மஜ்ஹிலா காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனுராக் வட்ஸ் கூறுகையில், மகளின் தலையை துண்டித்து கொலை செய்த தந்தை சர்வேஷ் குமார் கைது செய்யப்பட்டுள்ளார் என கூறினார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளிட்ட 2019ம் ஆண்டுக்கான மகளிருக்கு எதிரன குற்றங்களில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தை பிடித்திருந்தது. இப்பட்டியலில் மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்கள் அடுத்த இடங்களை பிடித்துள்ளன.

தலையை துண்டித்து கொலை, மகள் கழுத்தை வெட்டிய தந்தை, கொலை, கொஊர கொலை,
Published by:Arun
First published: