மத்திய பிரதேச மாநிலத்தில் கணவர் ஒருவர் மனைவி உரிய நேரத்தில் உணவு சமைத்து தரவில்லை என்ற ஆத்திரத்தில் அடித்து கிணற்றில் வீசி புதைத்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தின் ஹத்பிப்லியா பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் மாலி. இவர் அருகே உள்ள ஊரில் வேலை பார்த்து வரும் நிலையில், நேற்று மாலை வழக்கம் போல வீடு திரும்பியுள்ளார். பசியுடன் வந்த தினேஷ் தனது மனைவி யசோதா மாலியிடம் உணவு கேட்ட நிலையில், தான் மற்ற வீட்டு வேலைகளில் பிசியாக இருந்ததாகவும், எனவே உணவு தயாரிக்க கொஞ்சம் கால தாமதம் ஆகும் எனக் கூறியுள்ளார்.
உணவு தயாரிக்கும் வரை தினேஷை மனைவி காத்திருக்க கூறிய நிலையில், இது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவருக்கும் இது வாக்குவாதமாக மாறி, அது பெரிய சண்டையாக உருவெடுத்துள்ளது. இந்த சண்டையை அவரது மகள் நிகிதா தடுக்க முயன்ற போதும் அவரால் ஏதும் செய்ய முடியவில்லை. ஒரு கட்டத்தில், ஆத்திரம் கொண்டு கையில் இருந்த கட்டையை வைத்து மனைவி யசோதாவை கணவர் தினேஷ் தாக்கியுள்ளார். தினேஷின் கொடூரமான தாக்குதலால் நிலை குலைந்து போன யசோதா ரத்தவெள்ளத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உடனடியாக மனைவியின் உடலை எடுத்த கணவர் தினேஷன் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் புதைத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இந்த சம்பவம் மகள் நிகிதா மூலம் அவர்களின் உறவினருக்கு தெரிய வரவே, அவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் சம்பவயிடத்திற்கு விரைந்த காவல்துறை உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பியுள்ளது.
இதையும் படிங்க:
எனக்கு அமைச்சர் பதவியே வேண்டாம்.. அந்த அதிகாரியிடம் கொடுத்துடுங்க - ராஜஸ்தான் அமைச்சரின் பரபரப்பு ட்வீட்
இதை அடுத்து கணவர் தினேஷை தேடி பிடித்த காவல்துறை, அவர் மீது இபிகோ 302, 294, 323 மற்றும் 201 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.கொலை சம்பவம் தொடர்பாக அவர் காவல் விசாரணையில் உள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.