ஹோம் /நியூஸ் /இந்தியா /

வளர்ப்பு நாய்க்கு டைமுக்கு சாப்பாடு வைக்கல.. உறவினரை அடித்துக் கொன்ற வாலிபர்!

வளர்ப்பு நாய்க்கு டைமுக்கு சாப்பாடு வைக்கல.. உறவினரை அடித்துக் கொன்ற வாலிபர்!

நாய் (மாதிரிப்படம்)- கொலை செய்தவர்

நாய் (மாதிரிப்படம்)- கொலை செய்தவர்

கேரளாவில் செல்லமாக வளர்த்த நாய்க்கு உணவளிக்கத் தாமதம் ஆனதால் உறவினரை அடித்தே கொன்ற வாலிபரை போலீஸ்சார் கைது செய்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kerala, India

  கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் மானென்கோட்டில் உள்ள அதானி பகுதியில் வசிக்கும் ஹக்கீம் (27) என்ற நபர், அவருடன் தங்கியிருக்கும் உறவினரான ஆர்சாத்(21) என்றவரை, தான் செல்லமாக வளர்த்த நாய்க்குச் சரியான நேரத்தில் உணவளிக்கவில்லை என்று கொடுமையாக அடித்துள்ளார். அதில் ஆர்சாத் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

  ஹக்கீம் மற்றும் ஆர்சாத் இருவரும் அதானி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கேபில் அமைக்கும் பணியில் இருந்துள்ளனர். இந்த நிலையில், அவ்வபோது ஆர்சாத்தை ஹக்கீம் துன்புறுத்தி வந்ததாகத் தெரிகிறது. தான் செல்லமாக வளர்த்த நாய்க்கு உணவு அளிக்கத் தாமதம் ஆனதால் ஆத்திரத்தில் ஆர்சாத்யை ஹக்கீம் நாயின் பெல்டை வைத்து அடித்துள்ளார்.

  மேலும் கட்டை கொண்டும் அடித்துள்ளார். இதனால் பலத்த காயம் அடைந்த ஆர்சாத்யை, அவர் அடித்த நாள் காலை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டதாகக் கூறி அனுமதிக்கப்பட்ட நிலையில் உடலின் உள்ள அதிக காயங்களினால் மருத்துவர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.

  ஆர்சாத் உடலின் உள்ளே ஏற்பட்ட ரத்தக் கசிவால் சிகிச்சை பலனின்றி சில மணி நேரங்களே இறந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறை விசாரணையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

  Also Read : பள்ளியில் மயங்கி விழுந்து சிறுமி மர்ம மரணம்.. ரூ.4 லட்சம் பேரம் பேசியதாக பெற்றோர் குற்றச்சாட்டு!

  ஹக்கீமை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாய்க்கு உணவு அளிக்கத் தாமதம் ஆனதால் இளம் வயது உறவினரை அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Janvi
  First published:

  Tags: Crime News, Dog, Kerala