Home /News /national /

மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கி கொலை செய்த தந்தைக்கு தூக்கு தண்டனை!

மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கி கொலை செய்த தந்தைக்கு தூக்கு தண்டனை!

ராஜஸ்தான் மாநிலத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த தந்தைக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோடா அருகே உள்ள நயபுரா பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் கடந்த 2015-ம் ஆண்டு மே 13-ந் தேதி வீட்டில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதில் அவர் 4 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்தச் சிறுமியை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக உயிரிழந்த பெண்ணின் தாய் கூறும்போது, ‘நீண்ட காலமாக உயிரிழந்த சிறுமி அவரது தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறாள் என்பது தெரியவந்துது. டி.என்.ஏ பரிசோதனையிலும் அவர்தான் குற்றவாளி என்பது உறுதியானது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி அசோக் சவுத்ரி, ‘பெண்னை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை விதித்தார்.

Also see:


 
Published by:Karthick S
First published:

Tags: Rape case

அடுத்த செய்தி