ஹோம் /நியூஸ் /இந்தியா /

திருப்பதி உண்டியல் காணிக்கையில் கைவரிசை..! - ரூ.94,000 முகக்கவசத்தில் பதுக்கி வைத்து திருடிய நபர் சிக்கினார்

திருப்பதி உண்டியல் காணிக்கையில் கைவரிசை..! - ரூ.94,000 முகக்கவசத்தில் பதுக்கி வைத்து திருடிய நபர் சிக்கினார்

திருமலை திருப்பதி கோயில்

திருமலை திருப்பதி கோயில்

திருமலை திருப்பதி உண்டியல் காணிக்கை எண்ணும் சேவையில் ஈடுபட்ட நபர் காணிக்கை பணத்தை திருடி கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tirumala, India

  பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினம்தோறும் உண்டியல் காணிக்கையை எண்ணுவதற்கென்று பிரத்தியேக பிரிவு உள்ளது. அங்கு வங்கியில் வேலை செய்யும் 50 ஊழியர்கள் ஒரு ஷிப்ட்டுக்கு 25 பேர் வீதம் 2 ஷிப்டுகளாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  பக்தர்களின் உண்டியல் காணிக்கை மற்றும் நன்கொடைகளை எண்ணுவதை பரகாமணி சேவை என்ற பெயரில் திருப்பதி தேவஸ்தானம் நாள்தோறும் அட்டவணை போட்டு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், திருப்பதி மாவட்டம் சந்திரகிரியைச் சேர்ந்த தீலிப் என்பவர் வங்கியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.

  இவர் திருப்பதி பரகாமணி சேவைக்காக கடந்த 23ஆம் தேதி சென்றுள்ளார். அன்று காலை 7.30 மணிக்கு உண்டியல் காணிக்கை எண்ணுவதற்கு உள்ளே சென்ற அவர், மத்தியம் 2.30 மணிக்கு பணி முடிந்து வெளியே வந்துள்ளார். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவரை சோதனை செய்தனர். அப்போது திலீப் முகக்கவசத்தில் 47 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்து ரூ.94,000 திருடியது அம்பலமானது.

  இதையடுத்து அவரை பிடித்து வைத்து சிசிடிவியை சோதித்ததில் அவர் பணத்தை திருடியது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து தேவஸ்தான ஊழியர்கள் அவரை திருமலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.பொதுவாக பரகாமணி எனும் உண்டியல் எண்ணும் சேவையில் ஈடுபடுவோருக்கு தேவஸ்தான நிர்வாகம் முகக்கவசம் தருவது வழக்கம்.

  இதையும் படிங்க: ரூபாய் நோட்டில் கடவுள் லட்சுமி படத்தை சேர்க்க வேண்டும் - மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்!

  ஆனால், தேவஸ்தானம் தந்த முகக்கவசத்தை அணியாமல் வேறு முகக்கவசத்தை திலீப் அணிந்து வெளியே வந்ததே பாதுகாவலர்களுக்கு சந்தேகத்தை கிளப்பியுள்ளது.இதையடுத்து நடைபெற்ற சோதனையில் தான் இவர் கையும் களவுமாக சிக்கியுள்ளார். ஏற்கனவே இவர், லட்டு கவுண்டரில் வேலை செய்த போது டோக்கன்களை திருடி விற்பனை செய்த குற்றத்திற்காக பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Stealing, Theft, Tirumala, Tirumala Tirupati