ஹோம் /நியூஸ் /இந்தியா /

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேக்கரி உரிமையாளர்.. கடையை பெட்ரோல் ஊற்றி எரித்த தந்தை..

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேக்கரி உரிமையாளர்.. கடையை பெட்ரோல் ஊற்றி எரித்த தந்தை..

கைதான பேக்கரி உரிமையாளர் கண்ணன்

கைதான பேக்கரி உரிமையாளர் கண்ணன்

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் பேக்கரியை தீ வைத்து எரித்துள்ளார் தந்தை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேக்கரி உரிமையாளரின் கடையை கொளுத்திய தந்தையை காவல்துறை கைது செய்துள்ளது.

கேரளா மாநிலம் கொச்சி மாவட்டத்தின் சேரநல்லூரில் கண்ணன் என்பவர் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். அவரின் கடைக்கு கடந்த புதன்கிழமை 13 வயது சிறுமி ஒருவர் இனிப்புகளை வாங்க வந்துள்ளார். கண்ணன் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை, இரவு 8 மணி அளவில் அந்த பேக்கரிக்கு வந்து பெட்ரோல் ஊற்றி அந்த பேக்கரிக்கு தீ வைத்தார். இதனால் பேக்கரியின் பெரும்பகுதி எரிந்தது. பேக்கரியின் உள் இருந்த பேக்கரி உரிமையாளர் மனைவிக்கும் இதனால் காயம் ஏற்பட்டது.

இதையும் படிக்க :  கள்ளக்காதலை மறைக்க 16 வயது மகளை கொன்று தற்கொலை நாடகமாடிய தாய்..

இதையடுத்து பேக்கரியின் உரிமையாளர் கண்ணன் மீது அந்த சிறுமியின் தந்தை புகாரளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் கண்ணனை கைது செய்தது காவல்துறை. மேலும், கண்ணனின் மனைவியும் அந்த சிறுமியின் தந்தை மீது புகாரளித்தார். இதனால் அந்த சிறுமியின் தந்தையையும் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.

First published:

Tags: Kerala, Pocso, Sexual abuse, Sexual harassment