ஹோம் /நியூஸ் /இந்தியா /

பயன்படுத்திய ஆணுறையை கோவில் உண்டியலில் போட்டு வந்த நபர் கைது!

பயன்படுத்திய ஆணுறையை கோவில் உண்டியலில் போட்டு வந்த நபர் கைது!

கடந்த ஓர் ஆண்டாக இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்ட வந்த நபரை போலீசார் தேடி வந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஓர் ஆண்டாக இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்ட வந்த நபரை போலீசார் தேடி வந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஓர் ஆண்டாக இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்ட வந்த நபரை போலீசார் தேடி வந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மங்களூரில் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் உள்ள உண்டியல்களில் பயன்படுத்திய ஆணுறையை போட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மங்களூரில் குறைந்தது 5 கோவில்களில் இருந்து காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. எனினும், காவல்துறையினரால் அந்த நபரை கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. இந்நிலையில், டிச.27ம் தேதி மங்களூர் கோராஜானா பகுதியில் உள்ள கோவில் உண்டியலில் பயன்படுத்திய ஆணுறை இருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க : கே.ஜி.எஃப். 2 உடன் மோதுமா விஜய்யின் பீஸ்ட்? - இரு படங்களும் ஏப்ரலில் ரிலீஸ் 

இதையும் படிங்க : அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ்... சிங்கிளாக வந்து மிரட்டப் போகும் வலிமை

Also read:  உலகிலேயே முதல் முறையாக கைகளால் இல்லாமல் மூளையின் சிக்னலால் ட்வீட் செய்த மனிதர்!

இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கோவிலில் உள்ள சிசிடிவி காட்சிகள், அந்த பகுதியை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தனர். அதில், ஒருவர் உண்டியலில் ஏதையோ போட்டுச் சென்றது தெரிந்தது.

இதையடுத்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த நபரை போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து, அவரிடம் நடந்த விசாரணையில் அவர் இதுபோன்ற பல்வேறு கோவில்களிலும் செய்து வந்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக மங்களூர் காவல் ஆணையர் சசிகுமார் கூறும்போது, பல்வேறு கோவில்களில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த நபர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணையில் அவர் தேவதாஸ் தேசாய் (62) என்றும், 20 ஆண்டுகளாக அவர் மங்களூரில் வசித்து வருவதும் தெரியவந்துள்ளது.

Also read:  லாக்டவுன் விதிமீறியவர்களை துப்பாக்கி முனையில் ஊர்வலம் அழைத்துச்சென்று அவமதித்த சீன போலீசார்

குற்றம் சாட்டப்பட்ட தேவதாஸ் தேசாய் குருத்வாரா மற்றும் அப்பகுதியில் உள்ள மசூதிகளில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை வீசி வந்துள்ளார். மேலும், அவர் எந்தெந்த பகுதிகளில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டார் என்பதையும் அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.

எல்லா இடங்களையும் எப்படித் தெளிவாக நினைவுபடுத்தி கூறுகிறார் என்று விசாரித்தபோது, அவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிந்ததாகவும், எல்லா இடங்களும் அவருக்கு நன்கு தெரியும் என்று கூறியுள்ளார். அவர் பயன்படுத்திய ஆணுறைகளை குப்பை கிடங்கில் இருந்து சேகரித்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Bangalore, Bangaluru, Condoms